ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்! பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில், யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம...
தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்!

தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்!   நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை (20-ந்தேதி) முதல் இரவுநேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவுநேர பஸ்களுக்கு தடை விதிக்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களுக்...
ஆம்பூர் அருகே வெள்ளை காகம்

ஆம்பூர் அருகே வெள்ளை காகம்

HOME SLIDER, NEWS
ஆம்பூர் அருகே வெள்ளை காகம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குள்பட்ட வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரது வீட்டின் அருகில் நேற்று மாலை வெள்ளை நிறமுடைய காகம் ஒன்று இரை தேடிவந்து தஞ்சம் அடைந்துள்ளது இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெள்ளை காகம் சுவரின் மீது அமர்ந்திருக்கும் காட்சிகளைக் காணொலியாகவும், புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்....
தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…

தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… தமிழகத்தில் வெளியில் கொளுத்தி வரும் நிலையில், 4 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடல் பகுதிகளில் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி)  ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 20.4.2021 முதல் 22.4.2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய...
முகக்கவசம் அணிய கஷ்டமா இருக்கா ? தளர்வு அளித்த இஸ்ரேல்…

முகக்கவசம் அணிய கஷ்டமா இருக்கா ? தளர்வு அளித்த இஸ்ரேல்…

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் முகக்கவசம் அணிய கட்டாய படுத்தும் வேளையில் இஸ்ரேலில் முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019 முதல் கொரோனா பரவல் காரணமாக பல கோடி உயிர்கள் பலியாகி வருகிறது. எனவே, இந்த தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொதுஇடங்களில் சுற்றுதல், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இஸ்ரேலில் தற்போது முகக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள 93 லட்ச பொதுமக்களில் 53 சதவீத மக்களுக்கு இரு தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு இரு வாரங்கள் ஆன நிலையில் 68 % மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டதால் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது. அதன் அடிப்படையில் பொத...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி அனுமதி!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி அனுமதி! முதல்வர் பழனிசாமி சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. முதல்வர் பழனிசாமி நேற்றுக்காலை சேலத்திலிருந்து சென்னை வந்தார். பின்னர் தமிழகத்தில் உள்ள கரோனா தொற்று நிலை, அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்குறித்து சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று மாலை ஊரடங்கு, கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று காலை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதால் ஏற்கெனவே திட்டமிட்டப்படி அறுவை சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவம...
கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது, பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும்  என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல். இதுகுறித்த இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புகளுக்கும் காரணமாகியிருக்கும் பிரதமர் மோடி இந்த நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத...
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 5.8 ரிக்டர் அளவில் பதிவு

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 5.8 ரிக்டர் அளவில் பதிவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5.8 ரிக்டர் அளவில் பதிவு ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள புஷேர் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.‌ இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஈரான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் ஈரானின் புஷேர் அணு உலை அமைந்துள்ளது நிலநடுக்கம் காரணமாக அணு உலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புஷேர் அணு உலையானது ரிக்டர் 8 வரையிலான நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது....
இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்!

இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்! இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2.6 லட்சத்தை தாண்டி உள்ளது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ஹாங்காங் அரசு நிறுத்தி உள்ளது. நாளை முதல் 14 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் ஹாங்காங்கில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தையும் தடை செய்துள்ளது இந்த மாதம் இந்தியாவில் இருந்து விமானங்களில் ஹாங்காங் வந்த பயணிகளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹாங்காங் நாட்டிற்கு வருவோர் தங்கள் பயணத்தி...
மீண்டும் நடிக்க வந்த மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்!

மீண்டும் நடிக்க வந்த மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் நடிக்க வந்த  மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்! லிங்குசாமி இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்திருந்த இவர் 2014-ம் ஆண்டு துபாயில் பணியாற்றும் அனில் ஜான் என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அத்ன் பின்னர் ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த மீரா ஜாஸ்மின் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை. இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. 2004-ம் ஆண்டு  ச...