ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

சைக்கிளில் வாக்களிக்க வந்து பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தாரா விஜய்?

சைக்கிளில் வாக்களிக்க வந்து பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தாரா விஜய்?

HOME SLIDER, politics, நடிகர்கள்
சைக்கிளில் வாக்களிக்க வந்து பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தாரா விஜய்? தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் இன்று காலை முதலே தங்களது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார். தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் புறப்பட்டார். தனது வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைந்திருப்பதாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் அவர் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் விலை உயர்வுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக...
அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி!

அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி!

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர் இந்தநிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது 2 நிமிடப் பேச்சு சர்வதேச பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020' அழகி போட்டியில் பேசிய ஹான் லே ‘‘இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மர் மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மருக்கு உதவுங்கள். சர...
13.80 சதவீத வாக்குகள் பதிவு!

13.80 சதவீத வாக்குகள் பதிவு!

HOME SLIDER, NEWS, politics
13.80 சதவீத வாக்குகள் பதிவு! தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 9.98 சதவீத வாக்குகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையில் 10.58 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்....
நடிகர் அஜித்-க்கு ரசிகரின் செல்ஃபி தொந்தரவு!

நடிகர் அஜித்-க்கு ரசிகரின் செல்ஃபி தொந்தரவு!

HOME SLIDER, politics, நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் அஜித் வாக்களிக்க சென்றபோது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்ததால், அவரது செல்போனை பிடுங்கி எச்சரித்துவிட்டு, பின்னர் செல்போனை அவரிடமே தந்துவிட்டார். நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள சென்னை பெருநகர் தொடக்கப்பள்ளியில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே சரியாக 6:30 மணிக்கு அவர் வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அஜித் - ஷாலினி ஆகியோருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முற்பட்டனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடத் தொடங்கியது இதைத் தவிர்க்கும் வகையில் அங்கிருந்த போலீசார் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஆகியோரை 6.40 மணி அளவில் வாக்கு சாவடி மையத்திற்குள் அழைத்து வந்தனர். இருந்தபோதிலும் அவருடன் சில ரசிகர்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் தொடர்...
90 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு – அசாமில் அதிர்ச்சி

90 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு – அசாமில் அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics
  அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்துக்கு உட்பட்ட ஹப்லாங் தொகுதியில் கடந்த 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் கோட்லிர் பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் தகுதிவாய்ந்த மொத்த வாக்காளர் எண்ணிக்கை 90 ஆகும். ஆனால் வாக்குப்பதிவு முடித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதித்த போது, 171 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, அந்த வாக்குச்சவாடியில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். மேலும் அந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்த 5 அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டு உள்ளார். அந்த வாக்குச்சாவடிக்கு தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்த வாக்காளர் பட்டியலை ஏற்க மறுத்திருந்த கிராம தலைவர், தானே ஒரு வாக்காளர் பட்டியலை கொண்டு வந்து அதன்படி மக்களை ஓட்டுப்போட வைத்ததாக தேர்தல் ஊழியர்...
சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே  நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.  வாக்குப்பதிவு தொடங்கியதும், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். அதுபோல் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். தற்போது நடிகர் வி...
தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின்!

தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவ...
செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ள நாசாவின் நவீன ஹெலிகாப்டர்!

செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ள நாசாவின் நவீன ஹெலிகாப்டர்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ள நாசாவின் நவீன ஹெலிகாப்டர்! செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸரோ பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உயிரினங்களுக்காக கரிம படிகங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பி உள்ளது. இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து செவ்வாய் கிரகத்துக்கு சென்றுள்ளது. இந்த ஹெலிகாப்டர், பெ...
இந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழை!

இந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழை!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் மாயமாகி உள்ளனர். https://twitter.com/SBSNews/status/1378911766046855168?s=20 இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வாரம் இந்தோனேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. https://twitter.com/WIONews/status/1379122914105118721?s=20...
தமிழகத்தில் தயார் நிலையில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள்!

தமிழகத்தில் தயார் நிலையில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள்!

HOME SLIDER, NEWS, politics
தமிழகத்தில் தயார் நிலையில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை  நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள். சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 528 சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மேற்பார்வையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்கு கொண்டு சேர்த்தனர். வாக்குப்ப...