நா.முத்துக்குமாரின் 50-வது ஆண்டு பொன்விழாவை, தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாட முடிவு!
நா.முத்துக்குமாரின் 50-வது ஆண்டு பொன்விழாவை, தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாட முடிவு!
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், சுமார் ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வந்த நா.முத்துக்குமார். ஆரம்பத்தில் இயக்குனராக பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணியாற்றினார்.
'வீரநடை' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருது வென்றிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி ...









