ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

‘சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்’ டார்ச் சின்னம் மறுக்கப்பட்டதில் கமல் ஆவேசம்!

‘சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்’ டார்ச் சின்னம் மறுக்கப்பட்டதில் கமல் ஆவேசம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “சுதந்திரம், ஜனநாயகம் அன்றாடும் கவனிக்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டு இருக்கிறது. அதனால் தான் எங்கள் கட்சிகளில் நிறைய மருத்துவர்கள் உள்ளனர். அரங்கம் எங்கும் தலைகளை பார்க்கவில்லை, தலைவர்களை பார்க்கிறேன். தமிழகத்தில் எங்களுக்கான டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையம் மறுக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் பல மாற்றங்கள் செய்ய காத்து கொண்டு இருக்கிறோம். சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள். நேர்மை தான் எங்கள் யுத்தி. பணத்திற்காக வாக்குகளை விற்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்....
சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது

சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது. சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்துள்ளனர். இதனால் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் தொடங்கியுள்...
வெளியேறிய சூர்யா… இயக்குனர் ஹரி இயக்கத்தில் இணைந்த அருண்விஜய்!

வெளியேறிய சூர்யா… இயக்குனர் ஹரி இயக்கத்தில் இணைந்த அருண்விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆறு, வேல், சிங்கம் படத்தின் 3 பாகங்கள் என சூர்யா - ஹரி கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. சாமி ஸ்கொயர் படத்துக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்க உள்ளதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘அருவா’ என்ற டைட்டிலில் உருவாகும் அந்தப் படத்துக்கு இமான் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் இப்படம் தொடங்கப்படவில்லை. இயக்குனர் ஹரிக்கும் நடிகர் சூர்யாவிற்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அருவா திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது இந்நிலையில் தற்போது இயக்குனர் ஹரி - அருண் விஜய்யை வைத்து படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கும் இந்தப் படம் அருண் விஜய் ...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின்  “அன்பறிவு”

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் “அன்பறிவு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “அன்பறிவு” சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் புதிய திரைப்படம் !   மிகச்சிறந்த குடும்ப திரைப்படங்கள் மற்றும் தரமான கதைகளை வெற்றி திரைப்படங்களாக தொடர்ந்து தந்து, தமிழ் சினிமாவில் பலதலைமுறைகளாக மிகப்பெரும் நடிகர்களுடன், எம் ஜி ஆர் துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித்குமார், தனுஷ் வரையில் பயணித்து, மிகப்பெரும் ஹிட் படங்கள் தந்து தனக்கென தனித்த பெயரை பெற்றுள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம். தற்போது இந்நிறுவனம் வளர்ந்து வரும் இளம்தலைமுறை நடிகரான நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் “அன்பறிவு” படத்தை தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் அஷ்வின் ராம் இப்படத்தினை இயக்குகிறார். தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் கூறியதாவது... சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் படைப்புகளை, தருவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. அப்படைப்புகள் எப்போ...
கஸ்தூரி போலீஸாக நடிக்கும் “இ.பி.கோ 302“.

கஸ்தூரி போலீஸாக நடிக்கும் “இ.பி.கோ 302“.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “இ.பி.கோ 302“. இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரிக்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – தண்டபாணி, இசை – அலெக்ஸ்பால், எடிட்டிங் – காளிதாஸ், கலை – மணிமொழியன், ஸ்டண்ட் – தீப்பொறி நித்யா, பாடல்கள் – முத்துவிஜயன், ராஜ குணசேகரன்,தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்,இணை தயாரிப்பு – ஆர்.பிரபு, தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சலங்கைதுரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர். இ.பி.கோ 302 படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை கஸ்தூரி பேசியதாவது.. ...
பூஜையுடன் துவங்கியது மிஷ்கினின் “பிசாசு 2”

பூஜையுடன் துவங்கியது மிஷ்கினின் “பிசாசு 2”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பூஜையுடன் துவங்கியது “பிசாசு 2” இயக்குநர் மிஷ்கினின் புதிய திரைப்படம். தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது. ‘சைக்கோ’ வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே பலரின் எதிர்பார்ப்பை இப்படம் கூட்டியுள்ளது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிகின்றார். இன்று ‘பிசாசு 2’ பட வேலைகள் இனிதே பூஜையுடன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுகல்லில் இன்று துவங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்ட...
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட தடை நீக்கம்!

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட தடை நீக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள் வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜரான வழக்க...
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் சந்திப்பு கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி 16 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பமானது. பின்னர் அர்ச்சனா, சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இரண்டாவது வாரத்தில் முதல் நபராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா. அவரைத் தொடர்ந்து வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட கடந்த வார இறுதியில் ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். இதுவரை 8 பேர் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் வீட்டுக்குள் 10 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்ட...
தமிழகத்தில் கமல் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை!

தமிழகத்தில் கமல் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்பட சில மாநிலங்களுக்கு 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.  2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தற்போது சின்னம் ஒதுக்கியுள்ளது. * சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம் * அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது. * தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு * புது...
அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் சண்ட்ரா லிண்ட்செ என்ற பெண்ணுக்கு போடப்பட்டது. அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணிக்கு சண்ட்ராவுக்கு அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது....