ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

வெப் சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக விமலா ராமன்

வெப் சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக விமலா ராமன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  சேரனுக்கு ஜோடியாக நடித்த நடிகை விமலா ராமன் வெப் சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக கலக்கி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று பார்வையாளர்களிடத்தில் சேரப்பா என்றே அப்பாவாக மனதில் பதிந்தவர் இயக்குனர் சேரன். பொறுப்பான இயக்குனராக சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என படத்தின் மூலம் நிரூபித்தவர். அவர் நடித்த படங்களில் ஒன்று ராமன் தேடிய சீதை. கடந்த 2018 செப்டம்பர் 19 ல் இப்படம் வெளியானது. கே.பி.ஜெகநாத் இயக்கத்தில் இப்படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை விமலா ராமன் நடித்திருந்தார். மழை நின்ற பின்பும் தூறல் போடல் பாடலினால் அவரின் முகம அனைவரின் மனதையும் ஈர்த்தது. பாலசந்தர் இயக்கத்தில் பொய் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராமன் தேடிய சீதை, இருட்டு படங்களில் நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களில் அதிகம் நடி...
இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் டி.ஐ.ஜி அஜித்ரோஹணா, கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றார். தினசரி சம்பளத்தின் அடிப்படையில் பலர் பிச்சை எடுப்பதாகவும், போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் நெரிசல் ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பதும், இடுவதும் தண்டனைக்கு உரிய குற்றம் என்று அவர் தெரிவித்தார். பிச்சை எடுப்பவர்கள் மற்றும் அளிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்....
புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு இட்லி

புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு இட்லி

helth tips, HOME SLIDER
  புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு  இட்லி.. பாசிப் பயறில் அதிக அளவு புரதச் சத்தானது உள்ளது, அந்தப் பாசிப்பயறில் பொதுவாக குழம்பு, பொரியல், சுண்டல், கடையல் வகைகளையே சாப்பிட்டு இருப்போம். தற்போது பாசிப் பயறு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: இட்லி அரிசி- 100மில்லி உளுந்து- 50 மில்லி பாசிப்பயிறு – 100 மில்லி வெந்தயம் - 2 ஸ்பூன் உப்பு-1/2 ஸ்பூன் செய்முறை: பாசிப்பயிறு, அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் தனித் தனியாக ஊறவைத்துக் கொள்ளவும். அடுத்து உளுந்தை முதலில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அரிசி, பாசிப்பயிறு, வெந்தயம் சேர்த்து அரைத்து தனித்தனியாக உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். காலை எழுந்து வழக்கமாக இட்லி செய்வது போல் இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வேகவிட்டு எடுத்தால் பாசிப்பயிறு இட்லி ரெடி....
உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் பிரண்டை குழம்பு

உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் பிரண்டை குழம்பு

helth tips, HOME SLIDER
  பிரண்டை எலும்புகளுக்கு வலுக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இதில் உள்ள மருத்துவக்குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. இந்த பிரண்டையில் குழம்பு வைப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் பிரண்டை இளசாக - 1 கப் புளி - 50 கிராம், சின்னவெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1, பூண்டு - 7 பல், சாம்பார்பொடி - தேவைக்கேற்ப, வெல்லம் - சிறிது, கடுகு - 1/2 தேக்கரண்டி, வெந்தயம் - 1/2 தேக்கரண்டி, உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப. வறுத்துப்பொடி செய்ய நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி, மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி, தனியா - 2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, கசகசா - 1/4 தேக்கரண்டி செய்முறை: பிரண்டையின் நார...
விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!

விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  படப்பிடிப்பில் இருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி. ஜெகநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு நடைபெறுவதால், விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லாபம் படப்பிடிப்பு தளத்தில் தன்னை காண வந்த ரசிகர்களை விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து தனது வழக்கமான பாணியில் முத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இந்த தகவலை அறிந்த ஸ்ருத...
பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டுகிறது கடலைமாவு

பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டுகிறது கடலைமாவு

helth tips, HOME SLIDER
  அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டுகிறது கடலைமாவு. கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும். கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோ...
தைவானில் பயிற்சியில் ஈடுபட்ட அதிநவீன போர் விமானம் மாயம்!

தைவானில் பயிற்சியில் ஈடுபட்ட அதிநவீன போர் விமானம் மாயம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  அதிநவீன போர் விமானம் மாயம்... தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயமானது. தைவான் கிழக்குப்பகுதியில் உள்ள குவலியன் விமானப்படை தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது, 44 வயதான கர்னல் ஜியாங் என்ற விமானி ஓட்டிய எப் 16 போர் விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்தது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாயமான எப் 16 போர் விமானத்தை தேடும்பணியை தைவான் விமானப்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர். போர் விமானம் தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது...
தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் – ஸ்டாலின்

தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் – ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் - ஸ்டாலின் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு  . நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தமிழக மக்கள் கொடுத்த அடியை விட சட்டமன்ற தேர்தலில் பலமான அடியை தருவார்கள் - ஸ்டாலின் தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு 2021 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தகவல்...
உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது!

உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது... தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்துப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நேற்று பயணம் தொடங்கிய அவரை, கொரோனா விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறியதாக நாகப்பட்டினம் மாவட்ட போலீசார் கைது செய்தனர். நேற்று மாலையில் கைது செய்யப்பட்ட அவர் சற்று நேரத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் வேளாங்கண்ணியில் தங்கியிருந்த உதயநிதி, தனது இரண்டாவது நாள் பிரச்சாரத்தை இன்று நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் இருந்து தொடங்கினார். அங்கு வீதியில் நடந்து சென்று மீனவ மக்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடினார். மீனவர் பிரதிநிதிகளிடமும் உரையாடிய உதய...
பிரேசிலில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது!

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் புதிதாக 38 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு 60 லட்சத்து 20 ஆயிரத்து 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கொரோனா உயிரிழப்பில் உலக அளவில் 2-வது இடத்தில் இருந்து வரும் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 552 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 68 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது....