சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு!

தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான நிர்வாகிகளை நீக்கிவிட்டு அரசின் சார்பில் ஒரு ஓய்வு பெற்ற நீதியரசர் நிர்வாக பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதோடு அவருக்கு உதவியாக தமிழக அரசால் ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அதில் மூத்த பல தயாரிப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. டி.சிவா தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் திடீரென கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டு கேட்கும் பணிகள் அனைத்தும் முடங்கி இருந்தது. இந்த சூழ...
அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்குமாம்!

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்குமாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை,' தமிழகத்தில் விருதுநகர், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலும், திருத்தணியிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசை ஒட்டி பதிவாகும் என்பதால் *அடுத்துவரும் 2 தினங்களுக்கு மக்கள் யாரும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் காலையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலையில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியஸும் குறைந்தபட்ச வெப்ப...
ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமணம்!

ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமணம்!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
    ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் பேரன் திருமணம்! முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூரு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது. கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஹெச்.டி.குமாரசாமியின் மகன் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. திருமண இடம் அமைந்துள்ள ராமநகரத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் குமாரசாமி குடும்பத்தின் பிரமாண்டமான திருமணத்தில் பங்கேற்க சுமார் 30-40 கார்கள் பெங்களூரிலிருந்து திருமண மண்டபத்தை நோ...
கொரானா இடர் நீங்க 3 மாத பயிற்சி முடித்து மருத்துவ உதவியாளராக பணியில் சேர்ந்த சுவீடன் இளவரசி!

கொரானா இடர் நீங்க 3 மாத பயிற்சி முடித்து மருத்துவ உதவியாளராக பணியில் சேர்ந்த சுவீடன் இளவரசி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கொரானா இடர் நீங்க 3 மாத பயிற்சி முடித்து மருத்துவ உதவியாளராக பணியில் சேர்ந்த சுவீடன் இளவரசி! ஐரோப்பிய நாடான சுவீடனில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1,200-க்கும் அதிகமானோரின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டின் இளவரசி சோபியா, கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.   35 வயதான இவர், ஆன்லைன் மூலம் 3 நாள் சிறப்பு பயிற்சியினை முடித்த பின்பு தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள சோபியாஹெமெட் மருத்துவமனையில் தனது சேவை பணியை தொடங்கி இருக்கிறார். மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கொரானா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார். அதே சமயம் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு தேவையான உதவிகளை செய்வார். சோப...
கல்தா இயக்குனரின் “லாக்டவுன்” குறும்படம் விரைவில்..!

கல்தா இயக்குனரின் “லாக்டவுன்” குறும்படம் விரைவில்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டு இருக்கிறோம். இந்த சூழலில் திரைத்துறையில் உள்ள பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள், பாடல்கள், கவிதைகளை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இறச்சி கழிவுகளால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து தனது கல்தா திரைப்படம் மூலம் எச்சரிக்கை செய்த இயக்குனர் ஹரி உத்ரா இந்த ஊரடங்கு குறித்து "லாக் டவுன்" என்ற விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தை விரைவில் சமூக வலைதளங்கங்களில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஹரி. அதோடு இவரது ஹரி உத்ரா அறக்கட்டளை சார்பில் கொரானா நிவாரண உதவிகளும் செய்யப்பட்டுள்ளது....
மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சம் பேர் மதுபானங்களை குடிப்பதால் ஏற்படுகிற பாதிப்பு காரணமாக மரணம் அடைகின்றனர். இவை தவிர சமூகத்திலும் மது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களை தயக்கமே இன்றி செய்து சட்டத்தின் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டு தங்களது குடும்பத்தினர் வாழ்க்கையையும் அழிக்கிறார்கள். இந்த சூழலில் தற்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரானா வைரசை ஒழிக்க மருத்துவ உலகம் போராடி வருகிறது. அதே நேரம் உலக அளவில் பல நாடுகளிலும் மது குடித்தால், அது கொரானா வைரசிடம் இருந்து பாதுகாக்கும், கொரானா வைரசை மது பானங்கள் கொன்று விடும் என்றெல்லாம் தவறான தகவல்கள...
தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை!

தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.வின் கொரானா வசூல் வேட்டை! உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் காரணமாக தமிழ் திரையுலகமும் முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த சூழலில் திரைத்துறையை மட்டுமே நம்பி உள்ள பலரும் வேலை இல்லாமல் பெரும் சிரமத்தில் வாழ்வாதார சிக்கலில் உள்ளனர். திரையுலகின் மிகப் பெரிய கூட்டமமைப்பான பெப்சிக்கு பலரும் நிதி உதவி, பொருள் உதவிகள் அளித்து வருகிறார்கள். நடிகர் சங்கமும் தன் உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கமும், கில்டு சங்கமும், திரைத்துறைக்கும் ஊடகத்துறைக்கும் பாலமாக இருக்கும் பி.ஆர்.ஓ.சங்கமும் தன் உறுப்பினர்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் செய்து வருகிறது. திரைத்துறை பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்கள் மூலமாக நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இப்படி பி.ஆர்.ஓ.சங்கத்தி...

அமெரிக்காவில் தொடர்ந்து ஆயிரங்களில் உயிர்பலி வாங்கி கோர தாண்டவம் ஆடும் கொரானா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அமெரிக்காவில் தொடர்ந்து ஆயிரங்களில் உயிர்பலி வாங்கி கோர தாண்டவம் ஆடும் கொரானா! உலகம் முழுவதும் 21 லட்சத்து 81 ஆயிரத்து 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 14 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 457 பேர் பலியாகியுள்ளனர். கொரானா சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அமெரிக்காவில் வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 482 பேருக்கு கொரானா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 29 ஆயிரத்து 479 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு

விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது - சேலத்தில் முதல்வர் உத்தரவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் கொரானா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் கொரானாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரானா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரானா நிவாரணத் தொகையான ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு...
கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்!

கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா நிவாரண பணிகளால் நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதல்வர்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதத்துக்கு ஒருமுறையாவது தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். கொரானா தொற்று தமிழகத்தில் நுழைந்த பிறகு அவர் சேலம் செல்லாமல் இருந்தார். கடந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகும் சென்னையிலேயே இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த தினமும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். வருகிற 20-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட உள்ளது. கொரானா தொற்றுவின் தாக்கமும் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். சேலத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் எத...