சினிமா துறைக்கு வந்த பிறகு வாழ்க்கையைக் கற்றுக் கொண்டேன் – நடிகர் வசந்த் ரவி
சினிமா துறைக்கு வந்த பிறகு வாழ்க்கையைக் கற்றுக் கொண்டேன் - நடிகர் வசந்த் ரவி
திரைத்துறைக்கு வந்தது பற்றியும் நடிக்கும் அனுபவங்களைக் குறித்தும் நடிகர் வசந்த் ரவி கூறியதாவது :-
சொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது சென்னை. ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்தேன். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வமிருந்தாலும் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. ஆனால், எனது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. எது செய்வதாக இருந்தாலும் மருத்துவம் படித்துவிட்டு செய் என்றார்கள். அவர்கள் கூறியதுபோல நானும் படித்து முடித்தேன். நடிப்பின் மீதிருந்த ஆர்வம் குறையாததால் மும்பைக்குச் சென்று அனுபம்கேர் நடிப்பு பள்ளியில் பயிற்சி மேற்கொண்டேன். பின்பு ராஜீவ் மேனனிடமும் பணியாற்றினேன். ஆனால், பெற்றோர்கள் மருத்துவம் மட்டும் போதாது மருத்துவ மேற்படிப்பும் ப...









