நான் படம் இயக்கினால் ஆர்யா தான் ஹீரோ சொல்கிறார் சந்தானம்..!
நடிகர் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 2 படத்தின் ப்த்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி பேசும்போது :-
சந்தனம் கூட இரண்டாவது படம். இயக்குநருடன் மூன்றாவது படம். இருவருடன் பணியாற்றுவது எப்போதும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். வெளிப்படையாக ஆலோசிக்கலாம். நம்முடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். அதேபோல, கதை எழுதுவதில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமையும். மேலும், தயாரிப்பாளர் ஒரு காட்சிக்கு தேவையானதை ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்காமல் செய்து தருவார். எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்ததால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இப்படம் காட்சி விருந்தாக அமையும்.
இயக்குநர் ராம்பாலா பேசும்போது :-
30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். பல இடங்களில் கதை கூறியும் எதுவும் ஏற்றுக் கொள்ளபடவில்லை. அதன்பிறகு தான் சந்தானம் நாம் இருவரும் சேர்ந்து படம் எட...









