ஜெ., சமாதியில் மாம்பழ கூடை வைத்து நடிகை விந்தியா அஞ்சலி..!

298 Views

 

ஜெ., சமாதியில் மாம்பழ கூடை வைத்து நடிகை விந்தியா அஞ்சலி..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அதிமுக தலைவர்கள் மாலை, மலர்களுடன் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான விந்தியா நேற்றிரவு திடீரென ஜெயலலிதா சமாதிக்கு மாம்பழக்கூடையுடன் வந்தார்.

விந்தியாவுக்கு ஆந்திராவில் 200 ஏக்கரில் மாம்பழ தோட்டம் ஒன்று உள்ளது. வித விதமான மாம்பழங்களை அங்கே அறுவடை செய்கிறார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு ஆண்டும் அதில் விளையும் மாம்பழங்களில் ஒரு பகுதியை அவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

ஜெயலலிதா மரணமடைந்ததால் அவர் நினைவாக வழக்கமாக அவருக்கு அனுப்பி வைக்கும் வகையில் விந்தியா மாந்தோப்பில் விளைந்த மாம்பழங்களில் கொஞ்சம் எடுத்து கொண்டு ஜெயலலிதாவின் சமாதியில் அந்த மாம்பழங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அந்த மாம்பழங்களை அங்கிருந்த பொது மக்களுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *