திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!
திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்... இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருந்தது.
அதிமுக கூட்டணியில் எப்படியும் ஒரு எம்பி பதவியை பெற தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், அதிமுக அதற்கு இணங்கவில்லை.
திமுக கூட்டணியில் இந்த பிரச்சனையே இல்லை. இருந்த போதும் சீனியர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே மாநிலங்களவை எம்பி இருந்து வரும் திருச்சி சிவா மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோர்களின் ப...









