வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

Tag: ukraine news

அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்....
Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே தீவிரமாக போர் நடைபெற்று வரும் சூழலில், இந்த விவகாரத்தில்  சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோ கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலகநாடுகள் வலியுறுத்திய போதிலும், ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே, சமாதானத்தை ஏற்படுத்த பெலாரஸ் நாடு முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை நடத்துகிறது. இவ்வாறு உக்ரைன் சேரும்பட்சத்தில் அது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது இந்த இரு நாடுகளுக்கும் இந்த...
படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

HOME SLIDER, ukrain war, World News, அரசியல், உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, கீவ் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் படைகள் உக்ரைனின் வேறு பகுதியில், தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் அறிவிப்பால் கீவ் நகருக்கான அச்சுறுத்தல் முடிந்து விட்டது என கருத முடியாது எனவும் ஜான் கிர்பி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ, உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில் அமைதிக்கான நேர்மறையான...
தியேட்டரில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் குண்டு தாக்குதல் 300 பேர் பலி!

தியேட்டரில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் குண்டு தாக்குதல் 300 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சம் அடைந்த திரையரங்கம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 300 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகிறது. ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. மரியுபோலில் 90 சதவிகித கட்டடங்கள் தாக்குதலில் உருக்குலைந்துள்ளன. அங்கு 3 லட்சம் பேர் மின்சாரம், குடி நீர் மற்றும் உணவு இன்றி சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை குறி வைத்து தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் மரியுபோல்...
ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன!

ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்துக்கு எதிராக ரஷியா, பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய 5 நாடுகள் வாக்களித்தன. சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் இந்த வரைவு தீர்மானத்தில் இல்லை என்பதால் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய நீதிபதி எதிர்த்து கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா புறக்கணித்தது உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது....
உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லூகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்து 389 குழந்தைகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றுள்ளதாகவும், இது கடத்தல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மரியுபோல் நகரிலிருந்து படைகள் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்தது. இதையடுத்து, அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. அதேநேரம், மரியுபோல் நகரிலிருந்து ஒரு லட்சம் பேர் வெளியேற விரும்பினாலும், சரியான வழித்தடம் இல்லாததால், வெளியேற முடியவில்லை என்று துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார். கெர்சன் நகரில் உணவு மற்றும் மருத்துவ விநியோகம் கிடைக்காமல் 3 லட்சம...
ukraine war: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படை

ukraine war: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படை

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல வேக்னர் என்னும் கூலிப்படையை  தங்கள் நாட்டுக்குள் ரஷ்ய அதிபர் புடின் அனுப்பியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன. மரியுபோல் நகரை தொடர்ந்து ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு வருகின்றன.  அந்நகரின் 80 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன்  மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழ...
ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்ய ராணுவம்!

ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்ய ராணுவம்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷ்யா முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. MiG-31 போர் விமானங்கள் மூலம் செலுத்தப்படும் கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் படைத்தவை. ரஷ்ய ராணுவத்துடன் கூட்டு வைத்துள்ள உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், மரியுபோல் நகருக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது...
உக்ரைன் போர்- இதுவரை 780 அப்பாவி பொதுமக்கள் பலி, நடிகையும் கொல்லப்பட்டார் ஐ.நா வேதனை

உக்ரைன் போர்- இதுவரை 780 அப்பாவி பொதுமக்கள் பலி, நடிகையும் கொல்லப்பட்டார் ஐ.நா வேதனை

HOME SLIDER, ukrain war, World News, அரசியல், உக்ரைன் போர், உலக செய்திகள்
    உக்ரைன் மீதான போரில் இதுவரை 780 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய கட்டடங்கள் தீக்கிரையாகின. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன. கிழக்கு உக்ரைனில் கார்கிவ் நகருக்கு அருகே மெரேபாவில் பள்ளி மற்றும் சமுதாய கூடங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கார்கிவ் நகரில் உள்ள கிழக்கு ஐரோப்பியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டான பாரபஷோவோவில் குண்டுகள் வீசப்பட்டன. அதில் அந்த மார்க்கெட் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந...
Ukraine War – ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வாக்களித்த இந்திய நீதிபதி!

Ukraine War – ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வாக்களித்த இந்திய நீதிபதி!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்த விசாரணை நடந்தது. இதில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவைக் கண்டித்து வாக்களித்தார். உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிடக் கோரியும், அந்நாட்டு படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய, எந்தவொரு நடவடிக்கையிலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, இது தங்களுக்கான வெற்றி என குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பை நிர்ணயிக்கக் கூடிய ஜூரிக்கள் எனப்படும் 15 நீதிபதிகளில் 13 பேரின் ஆதரவுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின்போது இந்திய ந...