லோகேஷை தொடர்ந்து தயாரிப்பாளராக களம் இறங்கிய நெல்சன்
ஜெயிலர் பிரமாண்ட வெற்றியை கொடுத்த நெல்சன் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். கவின் நடிக்க உள்ள அந்தப்படத்தை இயக்கப்போகிறவர் நெல்சனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சிவா. இப்போதைக்கு நெல்சன் ஆபீஸ்தான் இதற்கு ஆபீஸ். விரைவில் அறிவிப்பு வரும்!
ஏற்கனவே தனது உதவியாளர் நண்பர் ரத்னகுமாருக்கு நயன்தாரா-ராகவா லாரன்ஸ் காம்போவில் ஒரு படத்தை தயாரிக்கும் லோகேஷ்கனகராஜ் அந்த பட்த்திற்காக திரைக்கதை அமைத்து வசனமும் எழுதி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
*ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' பத்திரிகையாளர் சந்திப்பு*
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
'இவன் வேற மாதிரி', 'வேலையில்லா பட்டதாரி' புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் உடன் பணிபுரிந்தவரும், தனிப் பாடல்கள் மூலம் கவனம் ஈர...
*ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் வழங்கும், 'ராட்சசி' புகழ் சை கௌதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!*
நடிகர் அருள்நிதி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றி நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். மேலும், தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார்.
அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது. தற்போது, சை கௌதமராஜ் இயக்கத்தில், ஒலிம்பியா மூவீஸின் அம்பேத் குமார் தயாரிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் ...