செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: modi

உபி சாமியார் ஆட்சியில் தொடரும் அராஜகம் ஊடகங்களுக்கு தடை போலீஸ் அத்துமீறல்

உபி சாமியார் ஆட்சியில் தொடரும் அராஜகம் ஊடகங்களுக்கு தடை போலீஸ் அத்துமீறல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:* *காவல்துறையினர் மிரட்டுவதாக குடும்பத்தினர் புகார்!* *ஊடகங்களுக்கு தடை* *உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.* *ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செய்தியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.* *இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், தடைகளை தாண்டி வயல்வெளி வழியே ஓடிவந்து செய்தியாளர்களை சந்தித்தான். அப்போது தாங்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களிடம் இருந்த செல்போனையும் கா...
பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய கங்கனா ரனாவத்!

பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய கங்கனா ரனாவத்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பரபரப்பான சூழலில் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து பேசிய கங்கனா ரனாவத்   மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். மேலும், அவர் மகாராஷ்டிர அரசு மீதும் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்து தள்ளினர். மேலும், கங்கனா மகாராஷ்டிரா மாநிலம் வர கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது. இந்த ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு படைக்கான செலவை மாநில அரசு ஏற்குமா? அல்லது கங்கனா ரணாவத...
ரூ.3 ஆயிரம் கோடி நிதி வேண்டும் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

ரூ.3 ஆயிரம் கோடி நிதி வேண்டும் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தடுப்பு உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி நிதி வேண்டும் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை கொரானா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 15 மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இந்த ஆலோசனையின் போது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது;- “தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும், 2020-21-ம் நிதியாண்டுக்கான உள்ளாட்சி அமைப்பு நிதியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும், சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.1000 கோடியை வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டத்தின் ...
சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு!

சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    லடாக் எல்லை மோதல் சீனாவின் அத்துமீறல் குறித்து பேச 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு! இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை இப்போது பூதாகரமக வெடித்துள்ளது.  எல்லையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்லை மோதலைத் தொடர்ந்து பாதுகாப்...
உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் மரணத்திற்கு இந்தியா கண்டிப்பாக பதிலடி தரும் – மோடி

உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் மரணத்திற்கு இந்தியா கண்டிப்பாக பதிலடி தரும் – மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் மரணத்திற்கு இந்தியா கண்டிப்பாக பதிலடி தரும் - மோடி இந்திய பிரதமர் மோடி கொரானா வைரஸ் தொற்று குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இன்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதும் லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் வீர மரணத்திற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடி கூறுகையில் ‘‘எந்த காலத்திலும் நாம் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம். வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது’’ என்றார்....
ஊரடங்கில் தோற்றுப் போன மோடி அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு

ஊரடங்கில் தோற்றுப் போன மோடி அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊரடங்கில் தோற்றுப் போன மோடி அரசு - ராகுல் காந்தி கடும் தாக்கு நாடு முழுவதும் கொரானா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் பலகட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் எந்த பயனும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்தவகையில் மீண்டும் அவர் மத்திய அரசை கடுமையாக குறை கூறியுள்ளார்.மத்திய அரசின் 4-ம் கட்ட ஊரடங்கிலும் நோய்த் தொற்று அதிகரித்து இருப்பதாக வரைபடம் ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ள அவர், ‘ மீண்டும் மீண்டும் ஒரே செயலை செய்துவிட்டு வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்கிறது’ என்ற மேற்கோள் ஒன்றையும் அதில் குறிப்பிட்டு உள்ளார். அதே போல, உலக அரங்கில் கொரனாவை விரட்ட நடக்கும் ஓட்டத்தில் இந்தியா ...
மக்களை தனிமை படுத்திக் கொள்ள சொல்லிவிட்டு பார்லிமெண்ட் கூட்டத்தை நடத்துவது ஏன்? – மோடிக்கு சிவசேனா கேள்வி

மக்களை தனிமை படுத்திக் கொள்ள சொல்லிவிட்டு பார்லிமெண்ட் கூட்டத்தை நடத்துவது ஏன்? – மோடிக்கு சிவசேனா கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்களை தனிமை படுத்திக் கொள்ள சொல்லிவிட்டு பார்லிமெண்ட் கூட்டத்தை நடத்துவது ஏன்? - மோடிக்கு சிவசேனா கேள்வி இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார். இதற்காக வருகிற 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் மக்களை தனிமைப்படுத்த கூறும் பிரதமர் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. அந்தக் கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்துமாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அரசு பணிகளை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மற்றொரு புறம்...
குஜராத்தில் குடி தண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ.வின் காட்டுமிராண்டிதனம்..!

குஜராத்தில் குடி தண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ.வின் காட்டுமிராண்டிதனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாக்லெட் பாய் மாதவன் எரிமலையாக பொங்கி இருக்கிறார்... அவர் படத்துக்காகவா இல்லீங்க... நாடே தவிக்கும் தண்ணீர் பிரச்சினைக்கு... பாஜக.ஆளும் மாநிலம் குஜராத். அதிலும் சமீபத்திய மெகா வெற்றிக்கு சொந்தக்கார பிரதமர் மோடியின் நிர்வாகத்தில் இருந்த மாநிலம். நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல அங்கேயும் தண்ணீர் பஞ்சம். பலராம் தவானி என்ற பிஜேபி எம்.எல்.ஏ.வின் கட்சி ஆபீசுக்கு ஒரு பெண் சென்று குடிதண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் போய் பேச... அந்த நேரம் எம்.எல்.ஏ. அங்கே இருந்திருக்கிறார். இந்த பெண் பேசியதை கேட்க மறுத்து அந்த பெண்ணை அலுவலகத்தில் இருந்த ஒருவரை விட்டு அடித்து வெளியில் தள்ளியிருக்கிறார் எம்.எல்.ஏ. அப்போதும் ஆத்திரம் அடங்காத எம்.எல்.ஏ. தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து தெருக்குழாயடி சண்டை போல ஆபீஸ் அறையில் இருந...
ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..!

ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..! மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். விழாவுக்கு முன்பாகவே விழா அரங்கிற்கு சென்ற ரஜினிக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டது. ரஜினியை வைத்து தென் மாநிலத்தில் கால் வைக்க பாஜக திட்டமிடுகிறது. மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா முடிந்ததும் டில்லியில் இருந்து தர்பார் ஷூட்டிங் நடக்கும் மும்பை செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் ரஜினியை பிரதமர் மோடி சந்தித்து விருந்து கொடுக்க முடிவு செய்ததால் ரஜினி டில்லியில் தங்கி விட்டார். பிரதமர் மோடி இல்லத்தில் ரஜினிகாந்துக்கு இன்று ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் மோடி. அதன் பின் ரஜினியோடு மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளாராம்....

மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை (30-ம் தேதி) மாலை 7 மணியளவில் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அழைப்பையேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்....