வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

World News

ரஷ்யாவின் கொலை முயற்சிகளில் இருந்து 3 முறை தப்பிய உக்ரைன் அதிபர்!

ரஷ்யாவின் கொலை முயற்சிகளில் இருந்து 3 முறை தப்பிய உக்ரைன் அதிபர்!

HOME SLIDER, NEWS, politics, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  ரஷ்யப் படையினரால் மூன்று முறை அரங்கேற்றப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி லாவகமாக தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 9-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியை உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக, தலைநகருக்குள் ரஷ்ய படையினரால் நுழைய முடியவில்லை. ராணுவத்தினருடன் பொதுமக்களும் சேர்ந்து ரஷ்ய ராணுவத்தினருக்கு எதிராக சண்டையிட்ட...
ரஷிய அதிபர் புதின் மெழுகு சிலை அகற்றம்!

ரஷிய அதிபர் புதின் மெழுகு சிலை அகற்றம்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உலக செய்திகள்
பிரான்ல் நாட்டில் பாரிஸ் நகரில் கிர்வின் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் உலக அளவில்  முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்களின் உருவத்தினை மெழுகு சிலையாக வடிவமைத்து காட்சிப்படுகின்றனர். இந்த நிலையில் , கிர்வின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் மெழுகு சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து கிர்வின் அருங்காட்சியகத்தின் இயக்குநர் யெவஸ் டெல்ஹோமியோவ் பேசுகையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் ரஷிய இடையேயான போர் காரணமாக, ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் மொழுகு சிலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கிர்வின் அருங்காட்சியக வரலாற்றின் முதன் முறையாக , தலைவர் ஒருவரின் சிலை அகற்றப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாள்களுக்கு முன்னர் சிலையை சிலர் சேதப்படுத்த முயற்சி செய்ததாகவும...
உக்ரைனிலிருந்து 8.36 லட்சம் பேர் வெளியேற்றம்!

உக்ரைனிலிருந்து 8.36 லட்சம் பேர் வெளியேற்றம்!

HOME SLIDER, ukrain war, World News, உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து சாரை சாரையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு குழந்தைகளுடன் ஏராளமான உக்ரேனியர்கள் சென்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலந்தின் மெடிகா எல்லைக்கு சென்ற மக்களை அங்கு காத்திருந்த உறவினர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர். போருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உதவ ஏராளமானோர் நாடு திரும்பி வருகின்றனர். போலந்தில் வாழ உக்ரேனியர்கள் சிலர் ரயில் மூலம் லீவ் மற்றும் ஒடேசா நகரங்களுக்கு வந்தடைந்தனர். உக்ரைனில் 2.65 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், அதில் 80,000 பேருக்கு 3 மாதங்களில் குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளது. உக்ரை...
ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ரயில்களில் ஏற விடாமல் உக்ரைனிய பாதுகாப்பு படையினரும், மக்களும் தள்ளிவிடுவதாக அங்குகள்ள தமிழர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் நடந்து சென்றாவது எல்லையைக் கடக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, கிடைக்கும் வழிகளில் எல்லாம் உக்ரைனை விட்டு வெளியேற, இந்திய மாணவர்கள் முனைந்து வருகின்றனர். ஆனால், அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற தங்களை, உக்ரைன் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தடுப்பதாக இந்திய மாணவர்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் ...
ukraine war : இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துள்ள உக்ரைன் அரசு – ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு!

ukraine war : இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துள்ள உக்ரைன் அரசு – ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
  உக்ரைன் - ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது. கார்கிவ்வில் தங்கியுள்ள இந்தியர்கள்,  பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டிருந்தது. இதற்காக உக்ரைன் நாட்டு நேரப்படி நேற்று மாலை 6 மணிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. எங்கள் தகவல்களின்படி, உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களின் பெரும் ...
உக்ரைன் போர்… சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண் அறிவிப்பு!

உக்ரைன் போர்… சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவ தொலைபேசி எண் அறிவிப்பு!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிட முதல்வர் உத்தரவு - திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் mm.abdulla@sansad.nic.in-ல் தொடர்பு கொள்ளலாம் - எம்.எம்.அப்துல்லா எம்.பி.   044-2851 5288, 96000 23645 ஆகிய தொலைபேசி உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் - எம்.எம்.அப்துல்லா எம்.பி.    ...
Russia-Ukraine shokking War – ரஷ்ய வங்கிகளுக்கு உலகத் தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

Russia-Ukraine shokking War – ரஷ்ய வங்கிகளுக்கு உலகத் தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  மேற்கத்திய உக்ரைனிய நட்பு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளைத் தயாரித்து வருகின்றன, முக்கிய உலகளாவிய பரிமாற்ற அமைப்பிலிருந்து அதன் முக்கிய வங்கிகளை வெளியேற்றுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் இராணுவம் இரவோடு இரவாக பல நகரங்களை ஏவுகணைகளால் தாக்கி, தலைநகர் கீவின் தென்மேற்கே உள்ள வாசில்கிவ் என்ற இடத்தில் எண்ணெய் முனையத்தை எரித்ததாக நகர மேயர் கூறினார். குண்டுவெடிப்புகள் இரவு வானத்தில் தீப்பிழம்புகளையும் புகையையும் அனுப்பியது என்று ஆன்லைன் பதிவுகள் காட்டுகின்றன. வடகிழக்கு நகரமான கார்கிவ் அருகே கடுமையான சண்டை நடந்ததாக செய்திகள் வந்தன, அங்கு ரஷ்ய துருப்புக்கள் இயற்கை எரிவாயு குழாய் ஒன்றை வெடிக்கச் செய்ததாக உக்ரேனிய அரசு தகவல் தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழன் அன்று ஒரு சிறப்பு ரா...
உக்ரைனில் சிக்கிய 240 இந்தியர்களுடன் 3-வது விமானம் இந்தியா திரும்பியது

உக்ரைனில் சிக்கிய 240 இந்தியர்களுடன் 3-வது விமானம் இந்தியா திரும்பியது

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
  உக்ரைனில் சிக்கியிருந்த 240 இந்தியர்களை மீட்டு, 3வது விமானம் இன்று காலை இந்தியா திரும்பியுள்ளது. ரொமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 250 இந்தியர்களுடன் 2வது விமானம் இந்தியா திரும்பிய அடுத்த சில மணி நேரங்களில் 3வது விமானமும் இந்தியா வந்துள்ளது. டெல்லி வந்த 3வது மீட்பு விமானத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜியோதிராதித்ய சிந்தியா வரவேற்றார். உக்ரைன் நாட்டை ரஷ்யா தாக்கி வரும் நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த சுமார் 25 ஆயிரம்பேர் அங்கு கல்வி மற்றும் பணி நிமித்தம் காரணமாக உக்ரைனில் தங்கியுள்ளனர். அங்கு என்ன வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், உக்ரைனில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, பாதுகாப்ப...
உக்ரைனில் கார் மீது ஏறி நொறுக்கிய ரஷ்ய பீரங்கி!

உக்ரைனில் கார் மீது ஏறி நொறுக்கிய ரஷ்ய பீரங்கி!

HOME SLIDER, World News, உலக செய்திகள், வீடியோ
  உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்திவரும் சூழலில், ரஷ்ய ராணுவ பீரங்கி (Tank) முதியவர் ஒருவர் சென்ற கார் மீது ஏறி சேதப்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பீரங்கி ஏறியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. ரஷ்யா- உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்துவந்த நிலையில், அதிரடியாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது. அந்நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வருகின்றனர்.  உக்ரைன் தலைநகர் கிவ் பகுதியை ரஷ்ய படைகள் நெருங்கி வருகின்றன. இந்த தாக்குதலில் உக்ரைன் தரப்பில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனை நோக்கி வந்த ராணுவ பீரங்கி ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது ஏறியது. திட்டமிட்ட...
பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்!

பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இம்ரான்கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் அந்த நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் இம்ரான்கான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தொடக்கத்தில் புரட்சிகர நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக மாற்றத்தை கொண்டு வர நாங்கள் விரும்பினோம், ஆனால் பின்னர் நமது நாட்டின் அமைப்பு அதிர்ச்சியை உள்வாங்க இயலாது என்பதை உணர்ந்தோம்” என கூறினார். மேலும் அவர் “எனது அரசு மற்றும் அமைச்சகங்கள் விரும்பிய முட...