வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

REVIEWS

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS
பொன்வண்ணன்னோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை விட்டு பிரிகிறார் அவரது மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் கெளதம்(ஹரீஷ் கல்யாண்). தந்தை பொன்வண்ணனின் அரவணைப்பில் வளர்கிறார். தாய் வருவார் வருவார் என ஏங்கி ஏங்கி அவர் மீது வெறுப்படைகிறார் கெளதம். இதனால் ஒரு முரட்டு ஆளாகவே வளர்கிறார். எதற்கெடுத்தாலும் கோபம், அடி, என நண்பர்களோடு ஊர்சுற்றி வருகிறார். பெரிய இடத்து பெண்ணாக வருகிறார் தாரா(ஷில்பா மஞ்சுநாத்). மோதலில் ஆரம்பிக்கும் இருவரது சந்திப்பு பின் காதலில் இணைகிறது. கெளதமின் முரட்டுத்தனத்தால் அவ்வப்போது இருவருக்கும் சண்டை வருகிறது. வாழ்க்கை என்ற கட்டத்திற்குள் போகும் போது தாரா சில முக்கியமான முடிவுகள் எடுக்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.. இவர்களது காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. கதையின் நாயகனாக ஹரீஷ் கல்யாண் பொருத்தமான தேர்வு தான். ஆக்‌ஷன் களத்திற்கு புதியவர் என்றாலும், ஏற்றுக் ...
நெடுநல்வாடை விமர்சனம்

நெடுநல்வாடை விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
சிங்கிலிபட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருபவர் செல்லையா (பூ ராம்). வீட்டை விட்டு ஓடிப் போன மகள் இரண்டு குழந்தைகளோடு மீண்டும் தனது அப்பாவை(பூ ராமை) நாடி வருகிறார். மகனின் எதிர்ப்பையும் மீறி தனது மகளையும் பேரப்பிள்ளைகள் இருவரையும் வீட்டிற்குள் தங்க வைக்கிறார் பூ ராம். எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் தாய் மாமன் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சொல்லி தனது பேரனை வளர்க்கிறார். படிப்பில், படு சுட்டியாக இருக்கும் நாயகன் இளங்கோவிற்கு நாயகி அஞ்சலி நாயர் மீது காதல். தாத்தா அறிவுரையின்படி தனது குடும்பத்திற்காக தனது காதலை தியாகம் செய்கிறார் இளங்கோ. ஒரு கட்டத்தில், காதலால் பல பிரச்சனைகள் ஏற்பட, இறுதியில் இளங்கோ வேலைக்காக வெளிநாடு சென்று விடுகிறார். பல வருடங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விடுகிறார். இளங்கோவின் காதல் ஜெயித்ததா..?? தனது இறுதி காலத்தில் பேரனை பூ ராம் கண்டாரா இல்...
சத்ரு விமர்சனம்

சத்ரு விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
பரியேறும் பெருமாள் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கதிரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘சத்ரு’. சப்-இன்ஸ்பெக்டர் பதவியேற்று மிடுக்கான அதிகாரியாக வருகிறார் கதிர். நேர்மை, துணிச்சலின் காரணமாக பதவியேற்ற சில காலத்திலேயே 2 முறை சஸ்பெண்ட். சென்னையில் 5 இளைஞர்கள் குழந்தைகளை கடத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் குழந்தையை கடத்திவிடுகிறது இந்த கும்பல். வழக்கு கதிரின் கைக்கு வருகிறது. கடத்திய கும்பல் 5 கோடி கேட்டு மிரட்ட, ஒருவழியாக அந்த கும்பலின் ஒருவனை கண்டுபிடித்து அவனை சுட்டுக் கொன்றுவிடுகிறார் கதிர். சிறுவனையும் காப்பாற்றிவிடுகிறார். மேலதிகாரி சொன்னதை கேட்காமல் பணி செய்ததால் கதிரை மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்கிறார் காவல்துறை மேலதிகாரி. நண்பனை இழந்த அந்த நால்வரும், கதிரின் குடுபத்தில் உள்ள அனைவரையும் கொல்ல நினைக்கிறது. கதிரின் அண்ணன் குழந்த...
பூமராங் விமர்சனம்

பூமராங் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
தீ விபத்து ஒன்றில் சிக்கி தனது முகத்தை முழுவதும் இழந்து அகோரமாக காட்சியளிக்கிறார் சிவா. சிவா இருக்கும் அதே மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு கோமாவில் இருக்கிறார் சக்தி (அதர்வா). முக மாற்று அறுவைசிகிச்சை மூலமாக அதர்வாவின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர். சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு திரும்புகின்றார்  சிவா. இவரின் அழகை கண்டு இவர் மீது காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். வாழ்க்கை இப்படியாக செல்ல, சிவாவை கொல்ல நினைக்கின்றனர் சிலர். அதன் பிறகுதான் தெரிகிறது, தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிக்கு காரணம் என்று. அந்த சக்தி யார் என்று தெரிந்து கொள்ள அவரின் கிராமத்திற்கு செல்கிறார் சிவா. ப்ளாஷ்பேக் தொடர்கிறது. சக்தி (அதர்வா), ஆர் ஜே பாலாஜி, இந்துஜா மூவரும் நண்பர்கள். நன்கு படித்துமுடித்துவிட்டு ஒரு ஐ டி கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். திடீரென்று ஒருநாள் இவர்களோடு சேர...
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத அருண்விஜய்யின் ‘தடம்’!.. படம் பற்றி ஒரு முன்னோட்டம்!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத அருண்விஜய்யின் ‘தடம்’!.. படம் பற்றி ஒரு முன்னோட்டம்!

CINI NEWS, REVIEWS, செய்திகள்
    மகிழ்திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அருண்விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘தடம்’.   காட்சிக்கு காட்சி பதட்டம், செண்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன், பரபரப்பு என எதிலும் குறைவில்லாத ஒரு நல்ல திரைக்கதை ஓட்டத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. கதைக்கு ஏற்ற கதாநாயகனாக இப்படத்தில் வலம் வரும் அருண்விஜய், மிடுக்கான, கட்டுமஸ்தான உடல்கட்டோடு அனைவரையும் மிரள வைக்கிறார் தனது நடிப்பில். மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கேற்ற பொருத்தம் தான். பின்னனி இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்திற்கு பலம் தான். தரமான தடத்தை பதிவு செய்துள்ளது அருண் விஜய்யின் இந்த ’தடம்’ விரிவான விமர்சனம் விரைவில்.......
நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்

நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
நடப்பு அரசியல்வாதிகளுக்கு ‘ஆயில்’ஆப்புகளை வலிக்காமல் ஏற்றியிருக்கிற படம் ‘எல்கேஜி’ & கோடங்கி விமர்சனம் கலகலப்பான அரசியல் நையாண்டி படம் பாக்கலாம்னு இப்ப யாரும் யோசிக்கிறதே இல்ல... ஏன்னா நிஜமாவே தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாமே தெனந்தெனம் பண்ற கூட்டணி கூத்துக்களை பாக்கும்போது இதைவிடவா ஒரு நையாண்டி படம் வேணும்னு தோணும்... ரேடியோ ஜாக்கி பாலாஜி ஹீரோ வேஷம்போட்டு நடப்பு அரசியலை வரப்போற அரசியலை கட்சி பேதம் இல்லாம செக்குல போட்டு மாடு போட்டு ஆட்டி பிழிஞ்சி ஆயில் எடுக்க முயற்சி பண்ணியிருக்கார்... பல நிஜக்கட்சிகளுக்கு ஆயில் தடவி ஆப்பும் ஏத்தியிருக்கார்... யார் யாருக்கு ஆயில் தடவின ஆப்பு... யாருக்கெல்லாம் டிரை ஆப்புன்னு படம் பாத்தா புரியும்... எங்க ஊர் உங்க ஊர் கலாய்ப்பு இல்ல உலக மகா கலாய்ப்பு ஆர்.ஜே.பாலாஜியின் கலாய்ப்பு... ஆனா ஒரே ஒரு குறை... ஓவர் வாய்ஸ்... நடிப்பு பெருசா வரல... இந்...
‘கண்’ பூரா கண்ணீர்… கலை இல்லை… மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம்

‘கண்’ பூரா கண்ணீர்… கலை இல்லை… மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
‘கண்’ பூரா கண்ணீர்... கலை இல்லை... மானை காணோம் ‘கண்ணே கலைமானே’ கோடங்கி விமர்சனம் யதார்த்த படங்களை சமரசம் செய்து கொள்ளாமல் திரைக்கு கொண்டு வரும் இயக்குனர் சீனு ராமசாமியின் படம்னு போய் ஏமாந்த ஏராளமான நல்ல சினிமா விரும்பிகள் படம் முடிஞ்சி கண்ணு கலங்கி வீங்கி வெறுத்து தெறிக்க வைச்சிருக்கிற படம்தான் கண்ணே கலைமானே... இயற்கை விவசாயம் பத்தி பேசுறேன்னு இருக்குற விவசாயத்தையும் விவசாயிகளுக்கு மறக்கடிக்க இந்த படம் பாத்தா போதும்... கதை ஒண்ணும் புதுசு இல்லை... ரசாயன உரங்களை எதிர்த்து இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் கிராமத்து படித்த இளைஞன் உதயநிதி... அந்த கிராமத்தை சேர்ந்த கிராம வங்கிக்கு அதிகாரியாக வருகிறார் தமன்னா. ஆரம்பத்தில் மோதலில் தொடங்கும் தமன்னா உதயநிதி விவகாரம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இந்த காதலுக்கு ஊரில் பெரிய புள்ளியாக இருக்கும் உதயநிதி குடும்பம் பெருசாக எதிர்ப்பு தெரிவிக்காமல...