ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

செய்திகள்

சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு!

சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு! தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. இதனால் ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. உள்ளே இருந்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கூக்குரலிட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பண...
மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்!

மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்! அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பிரசாரத்தில் அவர் கூறியதாவது: * மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். * ஐடி.ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. * ரெய்டு போன்ற சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது. அதிமுகவை மிரட்டுவது போல் திமுகவை மிரட்ட முடியாது. * மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். * ஐ.டி. ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்....
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 31 பேருக்கு கொரோனா!

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 31 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 31 பேருக்கு கொரோனா! திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,384 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை பரி...
‘இந்தியன் 2’ விவகாரம் – லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!

‘இந்தியன் 2’ விவகாரம் – லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ விவகாரம் - லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு! கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். அடுத்து பாலிவுட்டிலும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தங்களது ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. லைகா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது...
நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா!

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா! இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.  வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன். என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்....
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே!

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே! சென்னை எழும்பூர்-மதுரை இடையே பகல் நேரத்தில் தேஜஸ் சொகுசு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு இரவு 9.15 மணிக்கு வந்தடையும். எழும்பூரில் புறப்படும் இந்த சொகுசு ரெயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று மதுரை சென்றடையும். இந்தநிலையில் தேஜஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் திண்டுக்கல்லில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர...
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை! தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வரிமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவின் தேர்தல் பிரசாரத்தை சபரீசன் கவனித்...
இன்னொரு முகமா காட்டித்தான் பாரேன்? அண்ணாமலையை கடுப்பேத்திய கனிமொழி MP

இன்னொரு முகமா காட்டித்தான் பாரேன்? அண்ணாமலையை கடுப்பேத்திய கனிமொழி MP

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பாஜக வேட்பாளரான அண்ணாமலை பிரச்சாரத்தின்போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கிப் பேசிய நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த திமுக எம்பி.கனிமொழி. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.ஒவ்வொரு கட்சியினரும் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் நிலவி வருகிறது இரண்டு கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து கொள்கின்றனர். இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.அதில் பேசி...
கோவையில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

கோவையில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கோவையில் நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மற்றும் நீலகிரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையம், துடியலூரில் பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று இரவே கோவைக்கு வந்த அவர் ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு சென்றார். அங்கு வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் இரவு அவினாசி ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று காலை 7 மணிக்கு மு.க.ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், சிங்காநல்லூர் வேட்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ.வும் வந்தனர். அப்போது அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள், இளைஞர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் உதய சூரியன் சி...
பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்!

பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றிய நிலையிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய முடியாத நிலையிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அவர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் கைகளை மட்டும் காட்டி வாக்கு சேகரித்துள்ளார். இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்கள் மீண்டும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- இன்று மாலை 5 மணிக்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்யும் அவர் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகில் வாக்காளர்களை சந்திக்கிறார். 6 மணிக்கு தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழவாசல் பகுதியிலும், 8 மணிக்கு- பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியிலும் அவர...