செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: கொரானா அரசியல்

கொரானாவை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழிக்கும் – டிரம்ப்

கொரானாவை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழிக்கும் – டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    உலகம் முழுவதும் கொரானா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்காவில் அதிக அளவில் கொரானா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கொரானா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். கொரானாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும். இந்தாண்டு இறுதிக்குள் கொரானாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன். தடுப்பூச...
கொரானா வந்துட்டாலும் வீட்லயே தனியா இருங்க – மத்திய சுகாதாரதுறை

கொரானா வந்துட்டாலும் வீட்லயே தனியா இருங்க – மத்திய சுகாதாரதுறை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா அறிகுறிகள் வந்தாலும் வீட்டில் தனித்திருந்தால் போதும் - மத்திய சுகாதார துறையின் அறிவிப்பு லேசான கொரானா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:- கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது முக்கியம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற பொதுமக்கள் உதவ வேண்டும். அவர்களை மறைத்து வைப்பது அவர்களுடைய குடும்பத்துக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் ஆபத்தாகும். லேசான கொரானா அறிகுறிகள் மற்றும் தொடக்கநிலை அறிகுறி இருப்பவர்கள், அறிகுறி தென்பட்ட நாளில் இருந்து 17 நாட்களுக்குள், வீட்டில் தங்கள் தனிமைப்படுத்துதலை முடித்துக் கொள்ளலாம். அதுபோல், தொடர்ந்து 10 நாட்களாக காய்ச்சல் இல்லாதவர்களும...
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்ப புதிய வழி – அரசு அறிவிப்பு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்ப புதிய வழி – அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, உலகம், செய்திகள்
  தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 25.03.2020 அன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்கள் நலனுக்காகவும், அவர்களின் எண்ணிக்கையினை அறியும் வகையில் இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். தமிழகத்துக்கு திரும்புவோரின் விவரம் அறிய, அவர்களை தனிமை...
உண்மையை சொன்னால் சிறையா? அரசுக்கு கமல் கேள்வி

உண்மையை சொன்னால் சிறையா? அரசுக்கு கமல் கேள்வி

CINI NEWS, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    அரசின் அவலத்தை செய்தியாக வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட இணைய ஊடக ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள் எனறு கூறியுள்ளார்.   https://twitter.com/ikamalhaasan/status/1253606497981837312?s=19...
ஊரடங்கு நீடிப்பா… மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை!

ஊரடங்கு நீடிப்பா… மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு நீடிப்பா... மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்! கொரானா என்ற கொடூர வைரசால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்து உள்ளது. தினமும் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் 25 லட்சத்தை நெருங்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளும் கொரானா வைரசில் இருந்து காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு  உள்ளது. இந்த சூழலில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வைரஸ் பரவல் குறித்தும் அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கொரானா தடுப்...
இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டவர்கள் அரேபியர்களின் எதிர்ப்பைக் கண்டு பம்மி பதுங்குவது ஏன் ? திருமுருகன் காந்தி கேள்வி

இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டவர்கள் அரேபியர்களின் எதிர்ப்பைக் கண்டு பம்மி பதுங்குவது ஏன் ? திருமுருகன் காந்தி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    இஸ்லாமியர்கள் மீது வன்மம் கொண்டவர்கள் அரேபியர்களின் எதிர்ப்பைக் கண்டு பம்மி பதுங்குவது ஏன் ? திருமுருகன் காந்தி கேள்வி இசுலாமியர் மீது வன்மம் கக்கிக் கொண்டிருந்த நச்சுப் பாம்புகள் அரேபியரின் எதிர்ப்பைக் கண்டு ஏன் பயந்து பம்முகின்றன?. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சவுதி அரேபியா சென்றிருந்த மோடி நூறு பில்லியன் டாலருக்கு (7,65,000 கோடி ரூபாய் மதிப்பில்) இந்தியாவிடம் முதலீடு செய்ய சவுதி மன்னரைக் கேட்டிருந்தார். சவுதியும் ஒப்புக்கொண்டிருந்தது. மேலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 20% சவுதியின் ஆரம்கோ வாங்கி இருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 75பில்லியன் டாலர்கள் (5,70,000 கோடி ரூபாய்) இதுவே இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் வெளிநாட்டு முதலீடு. சவுதி இந்தியாவுடன் வணிகம் செய்யும் நாடுகளில் நான்காவது பெரிய நாடாக இருக்கிறது. மேலும் மோடியுடனா...
ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம், உயிரிழந்தால் 1கோடி வழங்க வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!

ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம், உயிரிழந்தால் 1கோடி வழங்க வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. மேலும் காணொளி காட்சி மூலம் நடத்திக் கொள்ளலாம் என அறிவித்தது. இதையடுத்து கொரானா வைரஸ் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கொரானா மற்றும் ஊரடங்கால் பரிதவிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றன...
கிருமி நாசினி தெளிக்க மருத்துவ கவச உடை அணிந்து பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறரா நடிகை ரோஜா எம்.எல்.ஏ.?

கிருமி நாசினி தெளிக்க மருத்துவ கவச உடை அணிந்து பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறரா நடிகை ரோஜா எம்.எல்.ஏ.?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் திருமதி ரோஜா எம்.எல்.ஏ. நகரி தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக ஊர் முழுதும் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணியை அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா தொடங்கி வைத்தார். போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் கவச உடை அணிந்து கையில் கிருமி நாசினி பைப்பை பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் முடிந்ததும்... அப்படியே நாலு வீட்டுக்கு மருந்தடிச்சமாதிரி ஒரு வீடியோ எடுத்து அதை பப்ளிசிட்டிக்கு கொடுத்து விட்டு அப்பாடா கொரானாவை தடுக்கும் பணியை முடித்து விட்ட திருப்தியில் எம்.எல்.ஏ. அங்கிருந்து கிளம்பி விட்டாராம். இந்த பதிவை படித்ததும் பலருக்கு எம்.எல்.ஏ. அவரே களத்தில் இறங்கி செயல்பட்டதை கொச்சைப் படுத்துவது போல தோன்றும். அப்படி யோசிக்கிறவர்கள் ஒரு நிமிடம் இதையும் படியுங்கள்...
அதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை

அதிகம் பாதித்த தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கி மோடி செய்யும் கொரானா அரசியல் – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாதிப்பு அதிகரித்த தமிழகத்திற்குக் குறைவான நிதி ஏன்? இதுதான் மத்திய அரசின் கொரோனா அரசியல் என ஸ்டாலின் விமர்சனம்! கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டிற்கு குறைவான நிதியை ஒதுக்கி இருப்பது மத்திய அரசின் கொரோனா அரசியல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் தான் அதிகம் என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.பாதிப்பு குறைவாக உள்ள உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 234 பேர் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேசத்திற்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு பாஜக ஆளாத மாநிலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு ...