காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ரவி வரும் போது ஒலித்த “திராவிட நாடு வாழ்க” பாடல்!
மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ஆர்.என்.ரவி சென்றபொழுது, அங்கு ‘வாழ்க திராவிடம், திராவிட நாடு வாழ்க’ என்ற பாடல் பாடப்பட்டது.
மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப் படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மரியாதை செலுத்தியிருந்தார்.
இதற்காக நிகழ்விடத்திற்கு அவர் காரிலிருந்து இறங்கி சென்ற பொழுது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் பாடலைப் பாடினர்
முதலமைச்சர் ஸ்டாலின் வரும்பொழுது `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்க’ என்ற பாடல் ஒலிபரப்பானது. ஆளுநர் வருகை தரும் போது திராவிட நாடு பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
&nb...









