ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்
கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நாறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள ராஜ்கமல் நிறுவனம் ராஜ்குமார் பெரியசாமி இந்தப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்த்திருக்கும் சிவகார்த்தாகேயன் முதல்முறையாக நடிகர் கமலஹாசனின் தயாரிப்பில் நடிக்க இருப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....
டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில், இப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்....
ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் "அயலான்" கலாட்டா!
ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயர் வைத்து சமீபத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஏலியன் போன்ற உருவம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் இருப்பது போன்ற இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூ...
ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் 'சிக்சர்' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், 'சிக்சர்' படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்துள்ளோம்.
'நீ எங்கவேனா கோச்சிக்கினு...' என தொடங்கும் இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார்....
வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த புதன்கிழமையுடன் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது. கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்....
சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். 12 படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார்.
படத்தில் நடிப்பதுடன், எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கனா என்ற படத்தை தயாரித்துள்ளார். கனா படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தொலைக்காட்சி புகழ் ரியோ நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார்.
இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் பலரும் நடிக்க யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்திற்...
சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம்! SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.
இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, "எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும், நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம். நிச்சயமாக, சிவகார்த்திகேய...