சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

திரைப்படங்கள்

பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்… சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..!

பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்… சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்... சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..! தமிழ் சினிமாவில் கேலி பொருளாக... ஆபாச கதாபாத்திரமாக மட்டுமே காட்டப் பட்ட திருநங்கைகளை முதல் முறையாக மிக நேர்த்தியாக காண்பித்து, அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை வெளிப்படுத்திய படம் தாதா87. இந்த படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இப்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற பெயரில் பப்ஜி படத்தை ஐஸ்வர்யா தத்தாவை வைத்து தயாரித்து இயக்கி வருகிறார். அதே நேரம் அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு படத்தையும் இயக்கி வருகிறார். வழக்கமாக இவரது படங்களில் தமிழ் சினிமாவில் முன்பு பிரபலமாக இருந்து ஒதுங்கி இருக்கும் பிரபலங்களை  இப்போது தேடி பிடித்து நடிக்க வைப்பார். இந்த நிலையில் இப்போது இவரின் நிறுவனம் சார்பில்  அடுத்த தயாரிப்பாக பஜாரி என்ற டைட்டில் வெளியாகி உள்ளது. மலையாளம், தமிழ் இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது...
3 ஜோடிகளோடு FIR பூஜை போட்ட விஷ்ணு விஷால்..!

3 ஜோடிகளோடு FIR பூஜை போட்ட விஷ்ணு விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  3 ஜோடிகளோடு FIR பூஜை போட்ட விஷ்ணு விஷால்..! விஷ்ணு விஷால் ராட்சசன் படத்துக்கு பின்  அடுத்ததாக நடிக்கும் படம் எப்.ஐ.ஆர். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ...
விதார்த்-உதயா நடிப்பில் “அக்னி நட்சத்திரம்”

விதார்த்-உதயா நடிப்பில் “அக்னி நட்சத்திரம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *உதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்' மணிகண்டன் சிவதாஸ் - ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பு* 1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா - விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். மணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத...
தடகள வீராங்கனை வாழ்க்கை படத்தில் டாப்சி..!

தடகள வீராங்கனை வாழ்க்கை படத்தில் டாப்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து தடகள போட்டிகள் வீராங்கனையாக சாதனை பெற்ற ஒரு இளம்பெண்ணின் உண்மை கதையை இயக்குனர் நந்தா பெரியசாமி கதையாக எழுதி உள்ளார். இந்த கதையை திரைப்படமாக பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆர்காஷ் கருணா முன்வந்துள்ளார். இந்த கதை தற்போது பாலிவுட்டில் பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாக உள்ளது இந்த படத்தில் கதையின் நாயகியான ராஜஸ்தான் இளம்பெண்ணாக நடிகை டாப்ஸி நடிக்க உள்ளார். இதற்காக அவர் தடகள பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மி ராக்கெட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த அறிவிப்பை  நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ...
விஜய்-கார்த்தி-விஜய்சேதுபதி மோதும் தீபாவளி ரேஸ்…!

விஜய்-கார்த்தி-விஜய்சேதுபதி மோதும் தீபாவளி ரேஸ்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்-கார்த்தி-விஜய்சேதுபதி மோதும் தீபாவளி ரேஸ்...! அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தீபாவளி அன்று விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’, கார்த்தியின் ‘கைதி’ படங்கள் வெளியாவது உறுதியானதால், பிகில் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது ஆனால் படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் திட்டமிட்டபடி தீபாவளி ரிலீசுக்கு ரெடியாகிறது என அறிவித்தார். இதையடுத்து இந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில், கார்...
சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..! அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படமாகி வெளி வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய். ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. இதுபோல் பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது. தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை ...
கிறிஸ்மஸ் ரிலீஸ் நோக்கி பயணப்படும் பப்ஜி..!

கிறிஸ்மஸ் ரிலீஸ் நோக்கி பயணப்படும் பப்ஜி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே பயிற்சி பெறும் அர்ஜூமன். பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற காமெடி த்ரில்லர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜூமன். இந்த படத்தில் ஜஸ்வர்யாதத்தா. மொட்டராஜேந்திரன் நடிக்கிறார்கள்.அறிந்ததே தற்சமயம் அர்ஜுனன் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்க்காக ,வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது இந்ந வருடம். கிறிஸ்மஸ் விழா விடுமுறை நாட்களில் கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது....
தேசிய விருது கிடைக்காதது வருத்தமா – அசுரன் விழாவில் தனுஷ் சொன்ன ரகசியம்

தேசிய விருது கிடைக்காதது வருத்தமா – அசுரன் விழாவில் தனுஷ் சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தேசிய விருது கிடைக்காதது வருத்தமா - அசுரன் விழாவில் தனுஷ் சொன்ன ரகசியம் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். தனுஷ் பேசும்போது, ‘அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. நான் நடிப்பதற்கு வெற்றிமாறன் நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக...
நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..!

நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..! ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் வரிசை கட்டி வந்தன. பின்னர் அது குறைந்தது. பாகுபலி பட வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் உருவாகி இருக்கிறது. பெரிய செலவில் இந்த படங்கள் உருவாகின்றன. சமீபத்தில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் போரின் கதையை 3டியில் எடுத்து ரிலீஸ் செய்தார்கள். அந்த வகையில் 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதிஷ் திவாரி - ரவி, உதய்வார் இணைந்து இயக்குகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் மூன்று மொழியை சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர். ராமர் மற்றும் சீதை வேடங்களில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதா...
யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..!

யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..! யோகி பாபு தற்போது "பப்பி" படத்தில் நடிவருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. காரணம் இப்படத்தின் போஸ்டரில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகர் ஒருபக்கமும் மற்றொரு பக்கத்தில் நித்தியானந்தாவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர்.  அதற்காக பல்வேறு தரப்பில்  இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தற்போது சிவசேனாவை சேர்ந்த செல்வம் என்பவர் காவல் துறை கமிஷனரிடம் மனு ஒன்றை அ...