உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது.
ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் ஈடுகொடுத்து போராடி வருகிறது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷியா மீது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவில் எங்களது சேவையை நிறுத்தியுள்ளோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் மிகப் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான நெட் பிலிக்ஸ் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
ரஷியாவின் புதிய 'போலி செய்தி' சட்டத்தினால் டிக்டோக் செயலி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது....
உக்ரைன் அகதிகளுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் நன்கொடை வழங்கியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி ரஷ்யா முற்றிலும் சேதப்படுத்தி வருகிறது.
ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை விதித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு பலவகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
கடனுதவி, ஆயுதங்கள், படை வீரர்கள், இணைய வசதி, உணவு, தண்ணீர் என பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகள் குவிந்து வருகிறது.
இதனிடையே குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி,
அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 7 நாட்களில் மட்டும் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்...
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் ஒரு வார காலத்துக்கும் மேலாக நீடித்துவருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் காரணமாக அந்நாட்டின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து சாரை சாரையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு குழந்தைகளுடன் ஏராளமான உக்ரேனியர்கள் சென்றனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலந்தின் மெடிகா எல்லைக்கு சென்ற மக்களை அங்கு காத்திருந்த உறவினர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர்.
போருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உதவ ஏராளமானோர் நாடு திரும்பி வருகின்றனர்.
போலந்தில் வாழ உக்ரேனியர்கள் சிலர் ரயில் மூலம் லீவ் மற்றும் ஒடேசா நகரங்களுக்கு வந்தடைந்தனர்.
...
ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன உக்ரைன் அதிபர் வேதனை!
ரஷ்யாவின் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன என்றும் முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ 2வது நாளிலும் அப்படியே எதிர்கொள்கிறோம் என்றும் மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது என்றும் இதை எதிர்பார்த்தோம் என்றாலும்கூட அதிக வேதனையை தருகிறது என்றும் கூறியுள்ளார்.
https://youtu.be/5AcWZ9gguJI...
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்து ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
ரஷ்யாவின் இந்நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் நம்பகமான செய்தியை அறிவதில் சிக்கல் ஏற்படும் என ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
பிபிசி உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களும் மாஸ்கோவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவைத்துள்ளன.
முன்னதாக ரஷ்ய ராணுவத்தை பற்றி வதந்தி பரப்புவோருக்கு 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டத்தில் அதிபர் புட்டின் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பெரிய அளவில் ரஷ்யாவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக புதின் இந்த தடையை வித்திதிருக்கலாம் என்று கூறப்படுகிறது...
ரஷ்யப் படையினரால் மூன்று முறை அரங்கேற்றப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி லாவகமாக தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 9-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியை உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக, தலைநகருக்குள் ரஷ்ய படையினரால் நுழைய முடியவில்லை.
ராணுவத்தினருடன் பொதுமக்களும் சேர்ந்து ரஷ்ய ராணுவத்தினருக்கு எதிராக சண்டையிட்டு வர...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து சாரை சாரையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு குழந்தைகளுடன் ஏராளமான உக்ரேனியர்கள் சென்றனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலந்தின் மெடிகா எல்லைக்கு சென்ற மக்களை அங்கு காத்திருந்த உறவினர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர்.
போருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உதவ ஏராளமானோர் நாடு திரும்பி வருகின்றனர்.
போலந்தில் வாழ உக்ரேனியர்கள் சிலர் ரயில் மூலம் லீவ் மற்றும் ஒடேசா நகரங்களுக்கு வந்தடைந்தனர்.
உக்ரைனில் 2.65 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், அதில் 80,000 பேருக்கு 3 மாதங்களில் குழந்தை பிறக்கும் என தெரிவித்துள்ளது.
உக்ரைனை வ...
உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
ரயில்களில் ஏற விடாமல் உக்ரைனிய பாதுகாப்பு படையினரும், மக்களும் தள்ளிவிடுவதாக அங்குகள்ள தமிழர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் நடந்து சென்றாவது எல்லையைக் கடக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து, கிடைக்கும் வழிகளில் எல்லாம் உக்ரைனை விட்டு வெளியேற, இந்திய மாணவர்கள் முனைந்து வருகின்றனர். ஆனால், அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற தங்களை, உக்ரைன் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தடுப்பதாக இந்திய மாணவர்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் ...
உக்ரைன் - ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
கார்கிவ்வில் தங்கியுள்ள இந்தியர்கள், பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டிருந்தது.
இதற்காக உக்ரைன் நாட்டு நேரப்படி நேற்று மாலை 6 மணிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
எங்கள் தகவல்களின்படி, உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களின் பெரும் குழு...