திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

செய்திகள்

சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்ட பெரும் இன்னல்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தமிழக அரசுக்கும், சி.பி.எஸ்.இ. நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இருந்து 3,685 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டி இருந்தது என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளதாக ஒரு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வு மையங்களை தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஏன் அமைக்க முடியவில்லை என்ற காரணத்தை சி.பி.எஸ்.இ. மற்றும் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர் ஒவ்வொருவருக்கும் ரெயில் கட்டணம் மற்றும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ம...
சென்னை தலைமைச்செயலகத்தில் போலீசார் குவிப்பு

சென்னை தலைமைச்செயலகத்தில் போலீசார் குவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமைச்செயலகம்  கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது..   போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வண்ணம் தமிழக போலீசார் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் முதலே கைது செய்த வண்ணம் உள்ளனர்.இருந்தபோதிலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவருமான கு.தியாகராஜன் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு அருகே போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாக்டோ ஜியோ ...
டெல்லி உள்பட பல நகரங்களை தாக்கியது புழுதி புயல்: 20 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

டெல்லி உள்பட பல நகரங்களை தாக்கியது புழுதி புயல்: 20 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன் இரவு திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் பெய்தது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் பேரழிவை சந்தித்தன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பறந்தன. குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. திடீரென வீசிய இந்த புழுதி புயல் மற்றும் அதைத்தொடர்ந்து பெய்த இடி-மழையால், வீடுகளில் இருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். 129 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் டெல்லி, சண்டிகர், அரியானா,  மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த புயல் தாக்கிய...
கர்நாடக சட்டசபை தேர்தல்: ஒரே நாளில் மோடி- சோனியா காந்தி போட்டி பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல்: ஒரே நாளில் மோடி- சோனியா காந்தி போட்டி பிரசாரம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) பெல்காம் நகருக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் விஜயபுரா செல்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு விஜயபுராவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பிரசாரத்தை தொடங்கியபோது உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் பிரசாரத்தை பாதியில் முடித்துக் கொண்டதும், அதன்பிறகு வேறு எந்த தேர்தல் பிரசாரத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே விஜயபுரா நகரில் இன்று காலை பிரதமர் மோடி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தனது கடைசி கட...
நாடு முழுவதும் 2.62 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு: மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்

நாடு முழுவதும் 2.62 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு: மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்திய உணவு கழகம் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் எவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ளது? என்பது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கலந்துகொண்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர், இந்திய உணவு கழக செயல் இயக்குனர் (தெற்கு) ஆர்.டி.நஜீம், தமிழக பொதுமேலாளர்கள் எச்.எஸ்.தலில்வால், ஷைனி வில்சன், மாநில உணவுத்துறை ஆணையர் மதுமதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, மத்திய கிடங்கு துறையின் மண்டல மேலாளர் ஏ.டி.சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 886 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்கிறது. வரும் ஜூன் மாதம் வரை இந்த மையங்கள் செயல்படும். நடப்பாண்டு ...
சைக்கிளில் பயணம், மாட்டு வண்டியில் பிரசாரம் – கர்நாடகத்தை கலக்கும் ராகுல் காந்தி

சைக்கிளில் பயணம், மாட்டு வண்டியில் பிரசாரம் – கர்நாடகத்தை கலக்கும் ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருகிறார். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி இன்று சைக்கிளில் சென்று மாட்டு வண்டியின் மீது நின்று பிரசாரம் செய்தார். பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ராகுல், சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் ராகுல் பிரசாரத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து ராகுல் சிறிது தூரம் சைக்கிளில் சென்றார். இதில் வெற்று கேஸ் சிலிண்டர்களுடன் பெண்களும் கலந்து கொண்டனர். அதன்பின் மாட்டு வண்டியில் நின்றபடி ராகுல் காந்தி பேசியதாவது:- பொய்யான பிரசாரங்களை செய்வதற்காக மட்டுமே மோடி கர்நாடக மாநிலத்துக்கு வருகிறார். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஒன்றை கூட கடந்த நான்கு ...
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டணம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் தான் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இதேபோல் நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக இருந்தாலும் அணைக்கு வரும் நீர்வரத்து திருப்திகரமாக இருந்தால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் குறிப்பிட்ட காலத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ம...
பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. இந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 ஏக்கர் நிலத்தை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்ய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுபற்றி ரெயில்வே வாரியம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், “உபரியாக இருக்கும் ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களை மாநில அரசுகள் தேசிய அல்லது மாநில நெடு...
333 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த சவுதி இளவரசர்..!

333 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்த சவுதி இளவரசர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான், ரூ. 333 கோடி வரதட்சனை கொடுத்து, 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி இளவரசரான 68 வயது சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக அவர், 50 மில்லியன் டாலர்கள் வரதட்சணையாக அவர் கொடுத்துள்ளார். https://youtu.be/JBsSx-NKcxU திருமணத்தின் போது 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தவிர, ஒரு சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டன. இந்த பரிசுகள் மணப்பெண் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது. தவிர, வைரங்களும் தரப்பட்டது. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ...
பொய் செய்தியோ மார்பிங் படங்களையோ என் பெயரில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

பொய் செய்தியோ மார்பிங் படங்களையோ என் பெயரில் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. "ஒரு நாள் கூத்து" படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர்.சமீபமாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார். " கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகை படங்களை வெளி இட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது...