புதன்கிழமை, மே 15
Shadow

நடிகர்கள்

மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் நடிப்பில் இரு மொழிகளில் உருவாகியுள்ள “அர்த்தம்”

மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் நடிப்பில் இரு மொழிகளில் உருவாகியுள்ள “அர்த்தம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது… நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் தமிழ் படம். கடந்த லாக்டவுன் சமயத்தில் தான் இந்தப்படத்தை துவக்கினோம். இரண்டு மொழிகளில் எடுக்க திட்டமிட்டு மகேந்திரனை நாயகனாக்கினோம், அவர் சென்னை படப்பிடிப்பிற்கு மிக உதவியாக இருந்தார். இந்தப்படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி....
வைரலாகும் “சோழா சோழா” பாடல் – பொன்னியின் செல்வன்!

வைரலாகும் “சோழா சோழா” பாடல் – பொன்னியின் செல்வன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் "பொன்னி நதி" அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் இப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், அறிவித்தபடி "பொன்னியின் செல்வன்" படத்தின் இரண்டாம் பாடலான சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முத...
நடிகர் ரஜினி கவர்னர் ஆகிறார்?

நடிகர் ரஜினி கவர்னர் ஆகிறார்?

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிவிட்டு வந்த சூட்டோடு சூடாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கவர்னருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி "பளீர்" என கூறியதும் விவாதமாகி இருக்கிறது. உண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி-ரஜினி சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும் என்ற கேள்விக்குறி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கிறார்கள். அந்த இலக்கின் ஒரு பகுதிதான் கவர்னர் ரவி-ரஜினி சந்திப்பு என்கிறார்கள். ரஜினியை பயன்படுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதா வட்டாரத்தில் ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. பிரதமர் மோடி, ரஜினியை விரு...
ஒரு பெண் வெற்றிபெற பத்து மடங்கு போராட வேண்டும் – நடிகர் சூர்யா உருக்கம்!

ஒரு பெண் வெற்றிபெற பத்து மடங்கு போராட வேண்டும் – நடிகர் சூர்யா உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் சூர்யா பேசியதாவது, "எங்களுக்கு பின்னாடி இருக்கும் மிகப்பெரிய பல...
உருவாகிறது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம்.. வைரலாகும் வீடியோ!

உருவாகிறது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம்.. வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லூசிபர், பிரித்விராஜ், prithviraj, luciferமலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். இந்நிலையில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு 'எம்புரான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட...
தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த பிரபல நடிகை !

தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த பிரபல நடிகை !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'லால் சிங் சத்தா'. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் 'லால் சிங் சத்தா' படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர் ஒருகட்டத்தில், 'உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்? எங்கள் படங்களை பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் மோசமாகி விடப்போவது கிடையாது' என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் தரப்பிலும் பல விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து படத்தை புறக்கணிக்க போவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கரீனா கபூர் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். ...
வைரலாகும் ‘1947- ஆகஸ்ட் 16’ பட டீசர்!

வைரலாகும் ‘1947- ஆகஸ்ட் 16’ பட டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.ம...
காமெடியன் என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன் – தேசிய கொடி ஏற்றிய விடுதலை ஹீரோ சூரியின் ஓப்பன் டாக்!

காமெடியன் என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன் – தேசிய கொடி ஏற்றிய விடுதலை ஹீரோ சூரியின் ஓப்பன் டாக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
  75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கொடியேற்றி உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக நடிகர்  சூரி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக கொடி ஏற்றி விழாவை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர்  சூரிக்கு சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது. நடிகர் சூரி  பேசுகையில், நடிகர் சூரி  பேசகையில், அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் என்னை விழாவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக தலைவி கவிதா அவர்கள் அழைத்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிற...
இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’

இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் 'தடை உடை'* *விரைவில் நிறைவடையவிருக்கும் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படபிடிப்பு* சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான 'தடை உடை' எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசைய...
சலார் படத்தின் அப்டேட்!

சலார் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தின் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த நிலையில் சலார் படத்தின் அப்டேட் குறித்த தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பகல் 12.58 மணிக்கு சலார் படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ...