சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

politics

ரஜினி அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து  ஆர்ப்பட்டம்? ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை!

ரஜினி அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து  ஆர்ப்பட்டம்? ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினி அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து  ஆர்ப்பட்டம்? ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை! ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்த நிலையில் வருகின்ற 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் போராட்டம் நடத்த ராமதாஸ் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர்கள் சிலர் அனுமதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினரும், ரசிகர்களும் கலந்து கொள்ள வேண்டாம் என்று வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சந்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளார் இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற சென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முக்கிய அறிவிப்பு… நம் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.21 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையா...
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குஷ்பு நன்றி!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குஷ்பு நன்றி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு கோரிக்கை விடுத்ததையடுத்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி. அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும். பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு. அச்சம் இருந்தால் தியேட்டர்களுக்கு வராதீர்கள். உங்கள் அச்சத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது....
விவசாயிகளின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

விவசாயிகளின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசு உடனான விவசாயிகளின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வரும் நிலையில் போராட்ட களத்தில் இதுவரை 53 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று 7-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் சோம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், போராட்ட களத்தில் உயிரிழந்த 53 விவசாயிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மவுன அஞ்சலியை தொட...
டெல்லியில் தமிழுக்கான அகாடமி – உருவாக்கிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் தமிழுக்கான அகாடமி – உருவாக்கிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ் மொழி மற்றும் தமிழி மக்களின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமாக தலைநகர் டெல்லியில் தமிழுக்கான அகாடமியை டெல்லி அரசு உருவாக்கியுள்ளது. தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக அகாடமி தொடங்கியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றுவரும் டெல்லி அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் "டெல்லியில் தமிழ் அகாடமி" அமைத்துள்ள டெல்லி முதல்வர் @CMODelhi ( அரவிந்த் கெஜ்ரிவால்) மற்றும் துணை முதல்வர் @msisodia (மனீஷ் சிசோடியா) ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், டெல்லி...
முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்!

முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்வர் வாகனம் பின்னால் அணிவகுத்துச் சென்ற கார்கள் மோதல்! அதிக வேகம் ஆபத்தானது... இதை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கான்வாய் வாகன அணிவகுப்பில் நடந்துள்ளது. விபத்து நடக்கும் போது அங்கிருந்த பொதுமக்களில் யாரோ ஒருவர் எடுத்த வீடியோவை பார்த்தபின் முதல்வர் வாகனத்தை பின் தொடர்ந்து செல்லும் போது அவ்வளவு வேகம் தேவையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். மறைந்த பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் மற்றும் சிலையை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்க சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து அதிமுக பிரமுகர்கள் வாகனத்தில் அணிவகுத்து சென்றனர். அப்போது வாகனங்கள் ச...
தமிழகஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழகஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தமிழக அரசு அறிவிப்பு பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது * பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. * தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவி...
கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்!

கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள்
கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்! ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி லேசான மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கங்குலி விரைவில் நலம்பெற வேண்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்...
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

HOME SLIDER, NEWS, Photos, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள் அபுதாபியில் பாரம்பரிய கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் பெயரில் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கலைபொருட்கள், பாரம்பரிய தயாரிப்புகள், உணவுபொருட்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா நடைபெறும் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 கோபுரங்களில...
சவுரவ் கங்குலியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா பானர்ஜி

சவுரவ் கங்குலியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க (பிசிசிஐ) தலைவராக செயல்பட்டு வருகிறார். மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதியம் 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்படுள்ளதாகவும், அதற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சவுரவ் கங்குலி பெற்று வரும் மருத்துவமனைக்கு மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்றார். அங்கு அவர் சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். ...
ஸ்டாலின் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சர் திட்டம் அம்பலம்?!

ஸ்டாலின் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சர் திட்டம் அம்பலம்?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஸ்டாலின் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சர் திட்டம் அம்பலம்?!   https://youtu.be/iH2GXev1bE4