செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தியேட்டர்கள் திறக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை – கடம்பூர் ராஜு

தியேட்டர்கள் திறக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை – கடம்பூர் ராஜு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  கொரானா பரவல் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:- தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது...
தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியது: “வழிபாட்டு தலங்கள், திரையங்குகள் திறப்பது குறித்து வரும் 8-ம் தேதிக்கு மேல் மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழக முதல்வர் நாளைய தினம் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வார். புகைப்பிடித்தல், புகையிலை போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டாலும், அது போன்ற காட்சி வந்தாலும் அதன் தீமைகள் குறித்து குறிப்பிட்டு தான் வெளியிட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தீமை பற்றி குறிப்பிடமால் விளம்பரம் வெளியிடும் நிலை தமிழகத்தில் இல்லை. சின்னத்திரை படபிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்கான  வழிமுறைகளை எளிமைப்படுத்தி தமிழக அரசு உத்தரவு வழங்கியது. ஒரு தொடருக்கு ஒரு முறை அனுமதி வாங்கினால்...
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    சினிமா போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அனுமதி கேட்டு அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு! கொரானாவால் முடங்கி இருக்கும் திரைத்துறையில் ஷூட்டிங் முடிந்த படங்களுக்கு போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சுமார் 500 கோடிக்கு மேல் இப்படி ஷூட்டிங் முடிந்த படங்களில் பணம் முடங்கி உள்ளது. இந்த சூழலில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்து வைத்தால் படம் ரிலீஸ் செய்ய தயாராக இருக்க முடியும் என்பதால் இந்த கோரிக்கை கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதே போல டிவி சீரியல்களின் ஷூட்டிங்கை நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சுஜாதா விஜயகுமார், குஷ்பு இருவரும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு கொடுத்தனர்....
பால்கனியில் இருந்து மக்களை பார்க்கும் கமல் – அமைச்சர் கடம்பூர் ராஜு

பால்கனியில் இருந்து மக்களை பார்க்கும் கமல் – அமைச்சர் கடம்பூர் ராஜு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பால்கனியில் இருந்து மக்களை பார்க்கும் கமல் - அமைச்சர் கடம்பூர் ராஜு ஜோதிகா பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக சூர்யா அறிக்கை வெளியிட்ட விவகாரம் குறித்து  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியபோது, ’ஜோதிகா விவகாரம் இப்போது விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. கொரானா உலகளாவிய பிரச்னையாக இருக்கும் போது ஜோதிகா கருத்து, சூர்யா அறிக்கை எல்லாம் விளம்பரத்திற்கு  தான் உதவும். இந்த நேரத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பது எங்கள் கருத்து” என்று கூறினார்.   அதேபோல் கமல்ஹாசனின் பால்கனி அரசுகள் குறித்த விமர்சனம் குறித்து கேட்டபோது, ‘“எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. சினிமாவில் பேசுவதைப் போன்று பேசி வருகிறார். அரசியலாக மேதாவியாக பேசுவது  சரியா என்பதை அவருடைய எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன். நடிகர் கமல்ஹாசன் பால்கனிய...
டிஜிட்டல் ரிலீஸ் சர்ச்சை… பேசி தீர்க்கலாம்  வாங்க களம் இறங்கிய அரசு!

டிஜிட்டல் ரிலீஸ் சர்ச்சை… பேசி தீர்க்கலாம் வாங்க களம் இறங்கிய அரசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் வெளியிட செய்த முடிவுக்கு தியேட்டர்கள் அதிபர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு அடுத்ததாக வரும் சூர்யா, கார்த்தி,ஜோதிகா படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி தியேட்டர் அதிபர்களின் எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏராளமான தயாரிப்பாளர்கள் சூர்யாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்படுகிறது. இப்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு சமரசம் செய்து வைக்க முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்னை.  ...
தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்சை ஒழிக்க முடியாது; அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசால் மட்டும் தமிழ் ராக்கர்சை ஒழிக்க முடியாது; அமைச்சர் கடம்பூர் ராஜூ

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளிவந்துள்ளது.  இப்படத்தை தமிழ் ராக்கர்சில் வெளியிடுவோம் என மிரட்டல் வந்தது.  இதனால் இணையதளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் லைகா கேட்டுக்கொண்டது. தமிழ் ராக்கர்ஸ் உள்பட 2 ஆயிரம் இணையதள முகவரிகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து லைகா நிறுவனம் கோரிக்கையை விடுத்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டது. 3டி தொழில் நுட்பத்தில் படம் தயாரான நிலையில் அதனை திரையில் பார்க்க வசதியாக பல்வேறு திரையரங்குகளில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.  எனினும், கடந்த 29ந்தேதி படம் வெளியான சில மணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  இது தமிழ் திரையுலகில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ...