செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: கொரானா நிவாரண நிதி

13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்களின் சிரமங்களை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம், குளியல் சோப், சலவை சோப் உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. நிவாரணப் பொருட்கள...
ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடனுமா… 200 ரூபாய் அனுப்பினால் போதுமாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    200 ரூபாய் அனுப்பினால் ஜோடியாக டான்ஸ் ஆடலாம் - கொரானா நிதி திரட்டும் நடிகை தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா வெளிநாட்டு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார் ஸ்ரேயா. இதன்படி 200 ரூபாய் கூகுள் பே மூலம் கொரானா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அப்படி பணம் அனுப்பி வைக்கும் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தன்னுடன் டான்ஸ் ஆட வாய்ப்பு தருவதாக ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இப்படி திரட்டப்படும் நிதி கொரானா வைரஸ் காரணமாக வேலையிழந்து பட்டினியாக இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமாம். அதற்காக உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி ச...
தமிழகம் உட்பட 5 மாநிலங்கள், பிரதமர் நிவாரண நிதிக்கும் சேர்த்து ரூ.1.30 கோடி வழங்கிய விஜய்!

தமிழகம் உட்பட 5 மாநிலங்கள், பிரதமர் நிவாரண நிதிக்கும் சேர்த்து ரூ.1.30 கோடி வழங்கிய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா தடுப்பு நிவாரணத்திற்காக தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கும், பிரதமர் நிவாரண நிதியாகவும் ரூ.1.30 கோடி வழங்கிய விஜய்! உலகம் முழுவதும் கொடூர தாண்டவம் ஆடி வரும் கொரானா வைரஸ் தமிழகத்திலும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிவாரண நிதி உதவிகள் மத்திய, மாநில அரசுகளால் கேட்கப்பட்டுள்ளது. இது தவிர சினிமா தொழிலாளர்களுக்கு உதவ பெப்சியும் நிதி கேட்டு வருகிறது. பல்வேறு திரைப்பிரபலங்கள் நிதி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியாக 25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக 50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் , கேரளாவுக்கு 10 லட்சம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா 5 லட்சம் என மொத்தமாக ஒரு கோடியே 30 ல...
தமிழகத்தில் கொரானா நிவாரண நிதியாக 161 கோடி வந்துள்ளது!

தமிழகத்தில் கொரானா நிவாரண நிதியாக 161 கோடி வந்துள்ளது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      தமிழகத்தில் கொரானா நிவாரண நிதியாக 161 கோடி வந்துள்ளது! இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 13-ந் தேதிவரை மொத்தம் 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வரப்பெற்றுள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும். இதுவரை நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நி...
இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா!

இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    இணையத்தில் பாடி 980 கோடி ரூபாய் கொரானா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி லேடி காகா! புகழ்பெற்ற பாப் பாடகியான லேடி காகா கொரானாவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார துறைக்கு 980 கோடி நிதி திரட்டினார். இந்தநிலையில், கொரானா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடியை பாப் பாடகி லேடி காகா திரட்டியுள்ளார். ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம் என்கிற பெயரில் லேடி காகாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்ற இந்திய பாலிவுட் பிரபலங்களும் இதில் பங்கேற்றார்கள். லேடி காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். கொரானா விழிப்புணர்வு அறிவுரைகளைகள் நடிகர்கள் வழங்கினார்கள். இந்த இசை நிகழ்ச்சி இணையத்தில் மட்டு...
கொரானா ஒழிப்புக்கு நிவாரண நிதி கொடுத்தால் ஹாலிவுட் படத்தில் என்னோடு நடிக்கலாம் – டைட்டானிக் ஹீரோ அறிவிப்பு

கொரானா ஒழிப்புக்கு நிவாரண நிதி கொடுத்தால் ஹாலிவுட் படத்தில் என்னோடு நடிக்கலாம் – டைட்டானிக் ஹீரோ அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கொரானா ஒழிப்புக்கு நிவாரண நிதி கொடுத்தால் ஹாலிவுட் படத்தில் என்னோடு நடிக்கலாம் - டைட்டானிக் ஹீரோ அறிவிப்பு உலகம் முழுதும் நடிகரை பார்க்க வேண்டும், அவரோடு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும், ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்ற ஆசை உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதிலும் இப்படி போட்டோ எடுத்துக் கொள்ளவும், ஷூட்டிங் பார்க்கவும் பலர் பணம் கொடுப்பது தனிக்கதை. அதில் பிரபலமான நடிகரின் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்தால் எவ்வளவு பணம் கொடுக்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக தினம் தினம் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து இருக்கும் கொரானாவை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் உலகம் முழுதும் நிவாரண நிதி வசூல் நடை பெறுகிறது. திரையுலக பிரப...