வியாழக்கிழமை, ஜூன் 6
Shadow

Tag: தல

நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

நம்ம நண்பர் படம்தானே – ‘துணிவு’ குறித்து விஜய் சொன்ன பதில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'வாரிசு' படத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில், "துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று விஜய்யிடம் சொன்ன போது வரட்டும் பா. நம்ம நண்பர் படம்தானே.. அதுவும் நல்லா போகட்டும்.. நம்ம படமும் நல்லா போகட்டும்" என்று விஜய் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த கருத்தால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளன...
மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாள் நிகழ்விற்கு போன  அஜீத்!

மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாள் நிகழ்விற்கு போன அஜீத்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழில் அறிமுகமாகி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவின் புகழ் உச்சியில் இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போனபோது திடீரென மரணம் அடைந்தார். இவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி மும்பை வீட்டில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் போனிகபூர் குடும்பத்தாருடன் நடிகர் அஜித்தும் கலந்துக் கொண்டார். போனிகபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் இப்போது அஜீத் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை படத்திலும் அஜீத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..!

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
    மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜீத்குமார்..! நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டுமல்லாது பார்முலா 1 கார் ரேஸ், பைக் ரேஸ் போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக இருந்தார். இப்போது அவர் கவனம் துப்பாக்கி சுடும் போட்டிகளில் திரும்பி உள்ளது. சென்னை ரைபில் கிளப் சார்ப்பாக கோவையில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்குமார் கலந்து கொண்டார். இதில் 10 மீட்டர் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அகில இந்திய அளவிலான துப்பாக்கி ச...
அஜீத் வாங்கிய சொகுசு கார்…!

அஜீத் வாங்கிய சொகுசு கார்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமார் நடிகர் மட்டுமல்லாமல் நிஜமான பைக் ரேசர். பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நிஜ வீரர். இது தவிர ஆளிலாத குட்டி விமானங்களை இயக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவர். சமீபத்தில் அஜீத் நடிப்பில் ரிலீஸ் ஆன விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது. இப்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அஜீத் பைக், கார் பிரியர் என்பத்தால் புதுசு புதுசாக கார், பைக வாங்குவது அவர் வழக்கம். அந்த வகைய்ல் இப்போது வெள்ளை நிற வால்வோ சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அந்த காரின் படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நடிகர் கார் வாங்குறது ஒரு விஷயமா என்றால் அல்டிமேட் ஸ்டார்... தல... ஒத்த ரூபாய்க்கு கடலைமுட்டாய் வாங்கினாலே பரபரப்பாக்குவோம் தல மனசு கலர்ல கார் வாங்குனா சும்மாவா... என்கிறார்கள் தல ரசிகர்கள்...!...
பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…

பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் அஜீத் எப்போதும் ஒரு படம் முடித்து அதன் ரிசல்ட் தெரிந்த பின் தான் அடுத்த படத்தை ஓகே சொல்வார். இப்போதும் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வையை முடித்திருக்கிறார். மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கலாம் என செய்திகள் கிளம்பியது. அதிலும் அஜீத் நேரடி இந்தி படமாக இருக்க 3 கதைகள் தயாராக இருப்பதாக போனி கபூரும் சொல்லி இருந்தார். அஜீத் தரப்பில் வழக்கமாக ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது. இப்போது இந்தி படம் ரெடி. இயக்குனரும் ஓகே. கதையும் பக்கா. அறிவிப்பு மட்டுமே பாக்கி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். விஷயம் இதுதான்... நேர் கொண்ட பார்வை வாய்ப்பு வந்த போதே இயக்குனர் விஷ்ணு வர்தன் ஒரு கதையுடன் தலயை சந்தித்து பேசி இருக்கிறார். அந்த கதை பாலிவுட் பக்கா ஸ்டோரியாம். லைன் பிடித்து போக அஜீத் தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. அதற்கு முன்பாக இயக்குனர் விஷ்ணு வர்...
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வெங்கட் பிரபு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வெங்கட் பிரபு!

CINI NEWS, செய்திகள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா'. இது அஜித்தின் 50-வது திரைப்படம். அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் ‘மங்காத்தா 2' குறித்த தகவல்களை வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அதிரடியான பதிலை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இது பற்றி பேசிய வெங்கட் பிரபு, ‘மங்காத்தா 2' படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால், கண்டிப்பாக அஜித்துடன் ஒரு திரைப்படம் பண்ண ஆவலுடன் இருக்கிறேன். மங்காத்தா 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். மேலும் நிச்சயமாக அஜித்துடன் இன்னொரு படமும் பண்ணுவேன் என்று தெரிவித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் இந்த அறிவிப்...