தோல்வி பயம்… அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் – கோடங்கி ஸ்பெஷல்
தோல்வி பயம்... அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் - கோடங்கி ஸ்பெஷல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஜானகி எம்.ஜிஆர். கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன.
தலைவர் பதவிக்கு பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் நடிகர் நாசரும், சுவாமி சங்கரதாஸ் அணியில் இருந்து கே.பாக்யராஜூம் போட்டியிடுகின்றனர். இருதரப்பினர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது தேர்தலுக்கு ஒரு திடீர் சிக்கல் எழுந்துள்ளது
நடிகர் சங்க தேர்தலை ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்துவது குறித்து காவல்துறை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
இந்த கடிதத்தில், 'நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு கடிதம் எழுதிய...





