Sunday, March 29
Shadow

Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா பரவலை தடுக்க வீடுகளில் முடங்கிய மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் நிதி - முதல்வர் அறிவிப்பு சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் நிவாரண அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க அம்மாவின் அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. நேற்று தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நான் பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். அவற்றுக்கு இணங்க, நேற்று மாலை விரிவான அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்கீழ், சென்னையில் காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாணைகள் அனைத்தும் இன்று ம
கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு – சட்டசபையில் துரைமுருகன் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவால் எல்லாம் மூடியிருக்கு சட்டசபையும், டாஸ்மாக் மட்டும் திறந்திருக்கு - சட்டசபையில் துரைமுருகன் பேச்சு கொரோனாவால், டாஸ்மாக்கும் மூடப்படவில்லை, சட்ட சபையும் மூடப்படவில்லை என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறி இருக்கிறார். உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து கடும் பீதியை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சுமார் 140 பேர்களுக்கு வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரானா பாதிப்பால் இதுவரை இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே  வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், டாஸ்மாக் பார்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் கொரோனா பற்றி சட்டமன்றத்தில் எ
பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பீதி வேண்டாம்... கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு! முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:- கொரோனா வைரஸ் பற்றி இங்கே சொன்னார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தான், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மாலையிலேயே, கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கமாக அதை தெரிவித்தார். அதனுள் செல்ல விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவரும் இதைப் பற்றி தெரிவித்தார். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையிலே அரசு முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறது. ஆகவே, என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை தடுப்பு நடவடிக்க
தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு! தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை எம்பிக்கள் 6 பேரின் பதவிகாலம் முடிவடைந்ததால் தற்போது உள்ள உறுப்பினர்கள் அடிப்படையில் திமுக, அதிமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது. திமுக சார்பில் திருச்சி சிவா, இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கபட்டனர். அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை இவர்களோடு ஜி.கே.வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜி.கே.வாசன், தம்பிதுரை இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. பல்வேறு வாதங்கள், சட்ட மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட பரபரப்பான கூட்டம் இன்று நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் பேரவையை ஒத்தி வைத்தார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த 14-ம் தேதி இந்த ஆட்சிக்கான கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிந்து பட்ஜெட் நிறைவேறியதும் கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் – சிகிச்சை தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் – சிகிச்சை தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டு வருவாய் 72,000/- க்கு கீழ் உள்ள பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் தரமான அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை பதிவுபெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இந்த அறிவிப்பு நாளை முதல்
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கஜா புயலில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் - லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர வேண்டுகோள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் “மாண்புமிகு” தமிழக முதல்வர் .எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" சார்பாக ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம். மேலும் இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாத
தமிழக முதலமைச்சர் பழனிசாமி நவம்பர் 22ம் தேதி டெல்லி பயணம்

தமிழக முதலமைச்சர் பழனிசாமி நவம்பர் 22ம் தேதி டெல்லி பயணம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை மறுநாள் (20-ம் தேதி) பார்வையிட உள்ளேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 22ம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து நிவாரண நிதி கோர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது