மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக இன்று இரவு தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு வெண்கலத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆளுயரச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டக் கழக அலுவகத்தில் கலைஞரின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை வழங்கிய மாவட்ட கழகத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கை கனிமொழிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர் மறைவுக்கு பின்னர்,...
சட்டசபையை முடக்கி விட்டு தேர்தலை சந்தித்தால் ஒரு இடத்தில் கூட அதிமுக ஜெயிக்காது என திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்காக தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து
தி.மு.க இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது அவர் பேசுகையில், “தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பொழுது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்தது.
போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தமிழகத்தில் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினோம்.
தமிழகத்தில் முதலாவது அலையின் போது அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. அப்பொழுது ஒரு கோடி அளவிற்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா அலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தடுப்பு ஊசி கண்டிப்பாக போட வேண்டும் என்று மக்கள் மத்தியில...
குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக ஊர்திக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்,
அதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளதாக புகழாரம் சூட்டினார்.
செம்மொழி தகுதியை தமிழக்கு பெற்றுத் தந்தது, மெட்ராஸ் பெயரை சென்னை என மாற்றியது தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது என திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்.
தமிழ், தமிழர் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல என்று கூறிய முதலமைச்சர், ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஹிந...