புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

பெனாசிர் பூட்டோவை கொன்றது ஏன்?  – தலிபான்கள் வெளியிட்ட புத்தகத்தில் ஒப்புதல்..!

பெனாசிர் பூட்டோவை கொன்றது ஏன்? – தலிபான்கள் வெளியிட்ட புத்தகத்தில் ஒப்புதல்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பெனாசிர் பூட்டோவை கொன்றது ஏன்? - தலிபான்கள் வெளியிட்ட புத்தகத்தில் ஒப்புதல்..! பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி ராவல் பிண்டியில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசார பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார். இப்படுகொலைக்கு பாகிஸ்தானில் இயங்கும் தெக்ரிக்-இ-தலிபான் தீவிரவாதிகள்தான் காரணம் என அப்போதைய அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் குற்றம் சாட்டினார். அதை தலிபான்கள் மறுத்தனர். இந்த நிலையில் தற்போது பெனாசிர் பூட்டோ கொலைக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம் என அறிவித்துள்ளனர். தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுமன்சூர் ஆசிம் முப்தி நூர் வாலி எழுதிய புத்தகம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா மாகாணத்தில் பார்மல் என்ற இடத்த...
1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி

1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
1½ வருடத்துக்கு பின் கனிமொழி வீட்டுக்கு சென்ற கருணாநிதி தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். சுமார் 1 வருட காலம் அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை அதன் பிறகு அவரது உடல் நிலை ஓரளவு தேறியது. இதையடுத்து 1 வருடத்துக்கு பிறகு முரசொலி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முரசொலி பவள விழா கண்காட்சி படங்களை பார்வையிட்டார். சமீபத்தில் தனது இல்லத்தில் கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார். அதன் பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி.யின் வீடு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ளது. இந்த நிலையில் கருணாநிதி நேற்று இரவு கனிமொழி வீட்டுக்கு சென்றார். அங்கு கனிமொழி மற்றும் ராஜாத்தி அம்மாளை சந்தித்தார்.இரவு 8.15 மணிக்கு சென்ற அவர் 9 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் இருந்தார். பின்னர் அவர் அங்கிர...
வதந்தி வாட்ஸ்-அப்பில் வந்தது, சிரித்துவிட்டேன் – பி.வாசு கிண்டல்

வதந்தி வாட்ஸ்-அப்பில் வந்தது, சிரித்துவிட்டேன் – பி.வாசு கிண்டல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
வதந்தி வாட்ஸ்-அப்பில் வந்தது, சிரித்துவிட்டேன் - பி.வாசு கிண்டல் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நேற்று (ஜனவரி 15) மாலை இயக்குநர் பி.வாசு குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைத்தளத்தில் வெளியாயின. இதனால் தமிழ் திரையுலகில் பரபரப்பு நிலவியது. சில நிமிடங்களிலேயே அவர் நலமுடன் இருக்கிறார், வதந்திகளை கிளப்பாதீர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தன்னைப் பற்றிய வதந்திக்கு பி.வாசு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என் மீது அன்பு வைத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் என் வணக்கம். என்னைப் பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே அப்படி வாட்ஸ்-அப்பில் வந்தது. சிரித்துவிட்டேன். இன்று தான் உடற்பயிற்சி கூடத்தில் 6 கி.மீ நடந்துவிட்டு வந்தவுடன் தான் இச்செய்தியே வந்தது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிரிப்பு வருகிறது. எத்தனை ...
மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..!

மீண்டும் உயரும் பெட்ரோல், டீசல் விலை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பேரல் 70 டாலர்களை தொட்டதால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு கண்டுள்ளன. உலக அளவில் கச்சா எண்ணெய் அதிக அளவு உற்பத்தி செய்யும் ரஷ்யாவும், கச்சா எண்ணெய்யை அதிகம் விநியோகிக்கும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும் கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதுபோலவே, டாலரின் மதிப்பு சரிந்து வருவதாலும் அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக, 2014 டிசம்பரில் இதே விலையில் கச்சா எண்ணெய் விற்பனையானது. மூன்றாண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்கள் என்ற அளவில் விற்பனையாவதால், அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் ...
என்னை கொலை செய்ய சதி – பிரவீண் தொகாடியா பகீர்

என்னை கொலை செய்ய சதி – பிரவீண் தொகாடியா பகீர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
என்னை கொலை செய்ய சதி - பிரவீண் தொகாடியா பகீர் "ராஜஸ்தானில் 2015-ம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பிரவீண் தொகாடியா பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோதிலும், அதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸார் என்னை கைது செய்ய வந்திருப்பதாக தகவல் வந்தது. வந்திருப்பவர்கள் நான் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தான் எனது மொபைல் போன் இணைப்பை துண்டித்து விட்டேன். எனது குரலை நசுக்க சதி நடக்கிறது. நான் பேசக்கூடாது என சிலர் எண்ணுகின்றனர். என்னை கொலை செய்ய சிலர் இங்கு வந்துள்ளனர்’’ பிரவீண் தொகாடியா எனக்கூறினார். இதனிடையே, பிரவீண் தொகாடியா காணாமல் போன சர்ச்சை குறித்து விசாரணை நடத்த குஜராத் மாநில போலீஸ் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விஸ்வ இந்து பரிஷத் தலைவர்...
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படக்குழு ரிலீசுக்கு குறித்த நல்ல நாள் பிப்ரவரி 2..! விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். https://youtu.be/GRadOjRR4qk இதனை முன்னிட்டு இந்த படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்று, படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது. முதலில் இந்த படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர் இப்போது ஃபிப்ரவரி- 2, ரிலீசுக்கு நல்ல நாள் குறித்துள்ளார்கள். https://youtu.be/um0ndnAyc8c இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக்குடன் காயத்ரி, நிகாரிகா கதாநாயகிகளாக நடிக்க, இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இச...
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..!

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதுப்படம்..! ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்.ரவிக்குமார், தன்னுடைய முதல் படத்திலேயே ‘டைம் மிஷின் கான்செப்ட்’டை மையமாக வைத்துப் படமாக்கி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்ட நிலையில், தற்போது ரவிகுமாரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படம் முடிவடைந்ததும் ரவிகுமார் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 5வது படைப்பாக உருவாகும் இப்படம் அறிவியல் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்படவிருக்கிறதாம். பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கும் இப்படம் 2019ஆம் ஆ...
ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம்… கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை – ஞாநி கடைசி வீடியோ

ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம்… கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை – ஞாநி கடைசி வீடியோ

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
ஆண்டாள் ஒரு காமவேட்கை மிகுந்த கற்பனை கதாபாத்திரம் . கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையில் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை என மரணத்திற்கு முன்பு எழுத்தாளர் ஞானி தனது ஓ பக்கங்கள் வலைதளத்தில் கடைசி வீடியோ பதிவிட்டுள்ளார். அவரது கடைசி வீடியோ பதிவு...     https://youtu.be/pz7iCqop5Cs