புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ மூலம் இசையில் இணையும் ராஜா குடும்பம்..!

விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ மூலம் இசையில் இணையும் ராஜா குடும்பம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியை முதல் முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதே கூட்டணி இணைந்த ‘தர்மதுரை’ சென்ற ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த நிலையில் இவ்விருவரும் மீண்டும் ‘மாமனிதன்’ என்ற படத்தில் இணைகிறார்கள். இப்படம் குறித்தான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது, இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தன் YSR Films சார்பாக தயாரிக்க இருக்கிறார்.இதுகுறித்த அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. மேலும் இசை ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா,கார்த்திக் ராஜா ஆகியோர் சேர்ந்து இசையமைக்கவுள்ளனர்.இவர்கள் மூவரும் இணைவது இதுவே முதல் முறை என்பது குறிபிடத்தக்கது.அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் சொல்லும...
நடிகர்கள் ரஜினி-கமலுக்கு போட்டியாக உதயநிதியை களமிறக்கும் திமுக..!

நடிகர்கள் ரஜினி-கமலுக்கு போட்டியாக உதயநிதியை களமிறக்கும் திமுக..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசியலுக்கு வர விரும்புகிறேன், கட்சி வேலையில் ஈடுபடுகிறேன் அதை பொறுத்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின்  முதன் முதலாக திமுகவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் தொண்டர்களாக கட்சிக் கொடியை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு போராட்ட களத்தில் இணைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திமுகவும் நடிகராக உள்ள உதய ...
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மோடியின் பணமதிப்பிழப்பே காரணம் – எக்ஸ்.ரிசர்வ் வங்கி கவர்னர் குற்றச்சாட்டு

இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மோடியின் பணமதிப்பிழப்பே காரணம் – எக்ஸ்.ரிசர்வ் வங்கி கவர்னர் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணம் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணமாக உள்ளது. அமைப்புசாரா தொழில்கள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தத் தொழில்களில் பல தற்போது மூடப்பட்டு விட்டன. மேலும், அந்த சமயத்தில் அவற்றை நடத்தியவர்களால் தப்பிப் பிழைத்து மீண்டும் தொழில் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தணை அதிகரித்தாலும், அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. ஜி.எஸ்.டியில் இருக்கும் குறைகளை, பிரச்சனைகளைச் சரிசெய்தால் அது நீண்ட நாட்களுக்கு பலனளிக்கும்'' என்று தெரிவித்தார்...
இசைஞானியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட ஆங்கில  நாளிதழ்..!

இசைஞானியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட ஆங்கில நாளிதழ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இசைஞானி இளையராஜாவிற்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டதை சாதியை சேர்த்து தலைப்பிட்டு செய்தி பிரசுரித்திருந்தது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். இந்த செய்திக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் இன்றைய நாளேட்டில் தங்களின் தவறுக்காக அந்த நாளிதழ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. இளையராஜாவிற்கு பத்ம விருது கொடுத்ததன் மூலமாக தலித்துகளை கவர்ந்து விட்டனர் என்று தலைப்பிட்டு செய்தியை பிரசுரித்திருந்தது.இந்த தலைப்பிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு இளையராஜாவின் பத்ம விருது செய்தியை பிரசுரித்திருந்ததற்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மன்னிப்பு கேட்டுள்ளது. இளையராஜாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த நோக்குடனும் இந்த செய்தி வெளியிடப்படவில்லை என்றும் தலைப்பில் தவறான அர்த்தத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டதற்கு பகிரங்கமான மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அந்த நா...
உடைந்த காதலின் நினைவுகளை சுமக்க தனி மியூசியம்..!

உடைந்த காதலின் நினைவுகளை சுமக்க தனி மியூசியம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காதல் யாருக்குத்தான் பிடிக்காது. கண்டதும் காதல், காணாத காதல், வாட்சாப் காதல், பேஸ்புக் காதல், ராங் நம்பர் காதல், போல பல வகையான காதல்கள் இருந்தாலும், ஒரே ஒரு வகையான ப்ரேக் அப் தான். எவ்வளவு காதல் செய்தாலும், பிரிந்து விட்டால், எந்த ஒரு செயலுமே செய்ய முடியாமல் தனிமையில் ஆழ்ந்து மிகவும் வருந்துவோம். காதலே கொடுமை, அதிலும், பிரிந்தால், அதிலிருந்து மீள்வது அதனினும் கொடுமை. உங்களுக்கு ப்ரேக் அப் ஆன பிறகு, என்ன செய்வதென்று புரியாமல், அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களையும், அவர்கள் உங்களுக்குக் கொடுத்த பரிசுகளையும் வைத்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு இந்த இடம் அமையும். உலகில் எங்கெல்லாம் ப்ரேக் அப் ஆகி இருக்கிறதோ அதன் நினைவாக, க்ரூஷியாவில் மீயுசியம் ஆஃப் ப்ரோக்கன் ரிலேஷன்ஷிப்ஸ் என்ற பெயரில் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்காக தனியே அருங்காட்சி ஒன்றை உருவாக்கியு...
இந்தியப் பெண் புகாரால் பாலியல் வழக்கில் சிக்கிய ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி..!

இந்தியப் பெண் புகாரால் பாலியல் வழக்கில் சிக்கிய ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீனின் (வயது 65) திரைமறைவு வாழ்க்கையின் மர்மங்கள் பற்றி ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு தொடர்ந்து செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல பெண்கள், அவர் மீது பாலியல் புகார்களை அடுக்கினர். இந்த நிலையில் அவரிடம் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல் புகார் எழுப்பி உள்ளார். 2013-15ம் ஆண்டுகளில் ஹார்வி வெயின்ஸ்டீனிடம் பணியாற்றிய இவர், நியூயார்க் தென்மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். 11 பக்கங்கள் கொண்ட புகார் மனுவில் அவர், வெயின்ஸ்டீனின் நிறுவனத்தில் தான் பணியாற்றியபோது கடுமையான பாலியல் தொல்லை சூழலில் பணிபுரிய வேண்டியது இருந்ததாகவும், முடிவில்லா பாலியல் தாக்குதல்களுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், வீட்டுப்பணியாளர்கள் தங்கள் வேலையை செய்ய வருவதற்கு முன்பாக வெயின...
செக்ஸ் குற்றச்சாட்டில் அமெரிக்கா குடியரசுக்கட்சியின் நிதித்தலைவர் ராஜினாமா

செக்ஸ் குற்றச்சாட்டில் அமெரிக்கா குடியரசுக்கட்சியின் நிதித்தலைவர் ராஜினாமா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவில் ஆளும் குடியரசுக்கட்சியின் தேசிய கமிட்டி நிதித்தலைவராக இருப்பவர் ஸ்டீவ் வின். கோடீஸ்வர தொழிலதிபரான வின் மீது சில நாட்களுக்கு முன்னர் செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. தனது அலுவலக பெண் பணியாளரை கட்டாயப்படுத்தி தனது உறவுக்கு பயன்படுத்தினார் மற்றும் மசாஜ் செய்யும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து, ஸ்டீவ் வின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது. ஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஸ்டீவ் வின் மறுத்தார். தனது முன்னாள் மனைவியே இந்த பொய் செய்திகளுக்கு காரணம் என அவர் தெரிவித்தார். எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்டீவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு கட்சி தேசிய கமிட்டி தலைவர் மெக் டேனியல் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்...
கதிர்-சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “ MOTION  போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார்

கதிர்-சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “ MOTION  போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
கதிர்  - சிருஷ்டி டாங்கே நடிக்கும்   “ சத்ரு “   ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்  தான் இந்த படம். இந்த படத்தின்  MOTION  போஸ்டரை இயக்குனர் கெளதம்மேனன் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.     https://youtu.be/bXgon4HKoco...
யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தரவேண்டும்: ஓபிஎஸ்

யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தரவேண்டும்: ஓபிஎஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தரவேண்டியது தனி மனித கடமை என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்த விஜயேந்திரர் சர்ச்சையில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த சர்ச்சையில் உங்கள் கருத்து என்ன என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்ட செய்தியாளர்களுக்கு...   ”யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தருவது ஒரு தனிமனிதனின் கடமை என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சொன்னார் ஓ.பி.எஸ்....
ஜைன சந்நியாசியாக மாறிய பட்டதாரி பெண்..!

ஜைன சந்நியாசியாக மாறிய பட்டதாரி பெண்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜைன துறவியான பட்டதாரி பெண் சென்னையைச் சேர்ந்த மம்தா கட்டாரியா என்ற எம் பி ஏ படித்த பட்டதாரி இல்லற வாழ்க்கையை துறந்து, ஸந்நியாசம் வாங்கிக் கொண்டிருக்கிறர் .  இது குறித்த சென்னை அயனாவரத்தில் உள்ள டாடிபாடி ஜைன  ஆலயத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. ‘ ஜைன மதத்தின் தத்துவங்களை எடுத்துரைப்பதற்காகவும், அதனை பரப்புரை செய்வதற்காக ஜைன துறவிகள் சுற்றுபயணம் மேற்கொள்வதுண்டு. அது போன்ற தருணங்களில் யாரேனும் துறவற வாழ்க்கையை வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர்களுக்கு தீக்ஷா வழங்கப்படும். அதனை மூன்று நாள் வைபவமாகக் கொண்டாடுவார்கள். அது போன்றதொரு விழா தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தி நகரில் வசித்து வரும் மம்தா கட்டாரியா என்ற 29 வயது எம் பி ஏ படித்த பட்டதாரி பெண் சாதாரண லௌகீக வாழ்க்கையை புறந்தள்ளி துறவியாக வாழ உறுதி கொண்டிருக்கிறார். அவருக்கு இங்...