வெள்ளிக்கிழமை, ஜூன் 26
Shadow

Author: Kodanki

தனுஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ்..!

தனுஷ் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை தனுஷ் இயக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் தொடங்கவுள்ளது. 'வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படங்களின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு மேல் படமொன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. 'ப.பாண்டி' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படமாக இது உருவாகவுள்ளது. இதனை தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தெலுங்கில் முன்னணி நடிகரை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்....
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு தரும் சானட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் நடிகை தியா மிர்சா வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்சா பதவியேற்றிருக்கிறார். கென்யாவின் தலைநகரமான நைரோபியில், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் சுற்றுச்சுழல் மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட தியா மிர்சா “மறுசுழற்சிக்கு எதிரான சானிட்டரி நாப்கின்கள் நம்  நாட்டின் சுற்றுச்சுழலைப் பாதிக்கின்றன. அதனால்தான், நான் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஒரு நடிகையாக நான் இதைக் கூறுவது கவனத்துக்குரிய விஷயம். ஏனென்றால், பல சானிட்டரி நாப்கின் நிறுவனங்கள் அவர்களின் விளம்பரங்களில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், “பெண்கள் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாக, சுற்றுச்சுழலைப் பாதிக்காத, மக்கும் தன்மைகொண்ட நாப்கின்களை (biodegradable napkin...
‘சக்கப்போடு போடு ராஜா’ 2வது ட்ரெய்லர்

‘சக்கப்போடு போடு ராஜா’ 2வது ட்ரெய்லர்

CINI NEWS, HOME SLIDER, Trailer, டிரைலர்கள்
வி.டி.வி.கணேஷ் தயாரித்துள்ள 'சக்கப்போடு போடு ராஜா' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்தப் படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.   https://youtu.be/fRbIqg5Kz7Q
நாப்கின்  பிரச்னைகளை பேசும் பேட் மேன்

நாப்கின் பிரச்னைகளை பேசும் பேட் மேன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குநர் பால்கி இயக்கியுள்ள திரைப்படம் 'PADMAN'. சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நாப்கினின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கதையம்சம் கொண்ட இப்படம் வரும் குடியரசுத் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்தின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். https://youtu.be/-K9ujx8vO_A...
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..!  100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..! தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பேசாமல் அரசியல் கட்சிகளுக்கு ஏலத்தில் விட்டு விடலாம். எந்த கட்சியோ அல்லது எந்த வேட்பாளரோ அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கிறார்களோ அந்த தொகையை கொண்டு அந்த தொகுதிக்கு தேவையான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உட்பட தொகுதியின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரலாம். இந்த முறையை தேர்தல் ஆணையம் கையாண்டால் பணம் பதுக்கல்... வெட்டு குத்து கலாட்டாக்கள்... கள்ள ஓட்டு புகார்... தேவையற்ற அலைச்சல்கள்... எதுவும் நடக்காது. அரசு பணமும் வீணாகாது. தமிழகத்தில் மட்டும் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அங்கே ஓட்டுக்கு பணமழை கொட்டுவது சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பண மழை புகார் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில...
சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பில் தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகும் படம் ‘களவாடிய பொழுதுகள்’. நீண்ட கால காத்திருப்புக்கு பின் இந்த படம் வெளியாகிறது. https://youtu.be/miqHVx0edtI படம் பற்றி கூறிய பிரபுதேவா... “என் வாழ்நாளில் இது வரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்தியராஜ், கருப்பு ராஜா, சத்தியன் நடித்திருக்கிறார்கள். இசை - பரத்வாஜ், பாடல்கள் - வைரமுத்து, அறிவுமதி, கலை - கதிர், படத்தொகுப்பு - பி.லெனின், பிரேம், தயாரிப்பு - கருணாகரன், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் - தங்கர் பச்சான். படம் பற்றி கூறிய அவர்.. “ இது காதலிக்க போகிறவர்களுக்கு ஒர...
அருவி விமர்சனம்

அருவி விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
  அம்மா, அப்பா, தம்பி என குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அதிதி பாலன், தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரி தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவரிடம் செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அதிதிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் அதிதியின் பெற்றோர் அதிதியை வெறுத்து ஒதுக்குகின்றனர். தமது மகள் தவறான வழிக்கு போனதால் தான் அவளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக நினைத்து ஒரு கட்டத்தில் அதிதியை வீட்டை விட்டே துரத்திவிடுகின்றனர். பின்னர் மேன்சன் ஒன்றில் திருநங்கை ஒருவருடன் தங்குகிறார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கியை வைத்து அனைவரையும் மிரட்ட, போலீசாரால் கைது செய்யப்படுகிறார். பின்னர் மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்ட அதிதியிடம் போல...
பிரம்மா டாட் காம் விமர்சனம்

பிரம்மா டாட் காம் விமர்சனம்

Uncategorized
ளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் நகுல். இவரின் உறவினரும், இவரை விட திறமை குறைந்தவருமான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மாடலாக இருக்கும் நாயகி ஆஷ்னாவிற்கும், நகுலுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஆனால், இருவரும் சொல்லிக் கொல்லாமலே பழகி வருகிறார்கள். இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு செல்கிறார் நகுல். அங்கு கடவுளிடம், தான் பார்க்க வேண்டிய வேலையை, சித்தார்த் விபின் பார்த்து வருகிறார் என்று தன்னுடைய குறைகளை சொல்லுகிறார். உடனே ஏதோ மாற்றம் ஏற்படுகிறது. அதாவது நகுல் சி.இ.ஓ-வாகவும், சித்தார்த் விபின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள். இதன்பின், நகுலின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. தான் காதலிக்கும் ஆஷ்னா, இவரை காதலிக்காமல், சித்தார்த் விபினை காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும் பல...
சென்னை 2 சிங்கப்பூர்  விமர்சனம்

சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
இயக்குநராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் நாயகன் கோகுல் ஆனந்த். அவரை தயாரிப்பாளர் ஒருவர் ஏமாற்றி விட, தனது நண்பனின் உதவியால் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரை பார்த்து கதை சொல்ல செல்கிறார். அங்கு அந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர செய்வதறியாது விழிக்கும் கோகுல் ஆனந்த், தனது பையுடன் பாஸ்போர்ட், பணத்தையும் பறிகொடுக்கிறார். இவ்வாறாக இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் கோகுல் ஆனந்த் சொந்த நாட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், அங்கு நடக்கும் ஷூட்டிங் ஒன்றை பார்த்து, அங்கு செல்கிறார். அங்கு வீடியோ எடுக்கும் சத்யாவிடம் தான் ஒரு இயக்குநர் என்று கூறி தனது நிலையை கூறி உதவியையும் கோருகிறார். பின்னர் இருவரும் நண்பர்களாகின்றனர். சத்யா தனக்கு தெரிந்த தயாரிப்பாளரிடம் பேசி கோகுல் ஆனந்துக்கு வாய்ப்பு வாங்கி ...