பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்!
சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்!
பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்!
பெர்ப்லெக்ஸிடி ஏஐ
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்று சாட்ஜிபிடி பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது தொடாத பகுதிகளிலும் கூட சிறப்பாகச் செயல்பட, கூடுதல் திறன்களோடு பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனம் வந்திருக்கிறது.
சாட்ஜிபிடி என்பது படைப்புத் துறையிலும் உரையாடலிலும் பொதுத் தேவைகளுக்காகவும் பணியாற்றுகிறது எனில், பெர்ப்லெக்ஸிடி ஏஐ என்பதுஆய்வு நோக்கங்களுக்காகவும், உண்மை சரிபார்ப்புக்கும் பொருத்தமானதாக உள்ளது. கூகிளுக்கு நிகராக அல்லது அதை விட அதிகமான சாத்தியங்களைக் கொண்ட நிறுவனமாக பெர்ப்லெக்ஸிட்டியை உலகத்தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள். சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்ற தொழில்நுட்ப ஆளுமையாகவும், செயற்கை நுண்ணறிவுத்து...









