இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து KRG ஸ்டுடியோஸ் முதல் தமிழ் திரைப்படம் தயாரிக்கிறது!
KRG ஸ்டுடியோஸ் தொலைநோக்கு இயக்குனர் அஞ்சலி மேனன் ஒன்றிணையும் முன்னோடி படைப்பு
கன்னட திரையுலகில் தடம் பதித்து - ஆற்றல் மிக்க திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாக விளங்கும் KRG ஸ்டுடியோஸ், தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பை பெருமையுடன் அறிவிக்கிறது.
தனித்துவமான கதைசொல்லும் உத்தியை கையாளும் இயக்குநர் அஞ்சலி மேனனின் முந்தைய படைப்புகளான 'பெங்களூர் டேஸ்', 'மஞ்சாடிக்குரு', 'உஸ்தாத் ஹோட்டல்', 'கூடே' ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான 'ஒண்டர் வுமன்' ஆகிய திரைப்படமும் அனைத்து தரப்பினராலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
தனது படைப்புகளில் முத்திரை பதிக்கும் அஞ்சலி மேனன் இம்முறை KRG ஸ்டுடியோஸ் உடன் இனைகிறார், திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமான KRG முதல் முறையாக தமிழில் திரைப்பட தயாரிப்பில் அடி...









