திங்கட்கிழமை, ஜூன் 29
Shadow

Author: Kodanki

10 வருடத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்து நிற்கும் லிசி ஆண்டனி!

10 வருடத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்து நிற்கும் லிசி ஆண்டனி!

CINI NEWS
சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி திரையுலகில் 10 வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார். மொத்தப்படத்திலும் கவனம் ஈர்க்கும் அவரது நடிப்பிற்கு, பல இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் மூலம் அறிமுகமானவர் லிசி ஆண்டனி. முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்த நடிகை என பெயரெடுத்தவர், தொடர்ச்சியாக பல வித்தியாசமான குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார். தரமணி படத்திலும், பரியேறும் பெருமாள் படத்திலும் இவர் ஏற்ற பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது. ஓடிடியில் வெளியான ‘ராங்கி’ படம் இவ...
”என் இசைக்கு 35 மதிப்பெண்கள் கொடுக்கலாம்” – டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின்

”என் இசைக்கு 35 மதிப்பெண்கள் கொடுக்கலாம்” – டெவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநர் மிஷ்கின் பேசும் போது, இப்படத்தினை வழங்க வேண்டும் என்று  ராதாகிருஷ்ணன் சார், என்னிடம் முதன் முதலில் கேட்டார்.  பின்னர்  ஸ்ரீகாந்த் அவர்களின் வற்புறுத்தலால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்… சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்த செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். நான் உதவி இயக்குநாக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன். வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். ஆதித்யா, பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந...
தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த்!

தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த்! 2024ம் ஆண்டில் பத்ம விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, சமூகப் பணி தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அதன்படி, மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உட்பட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷண் விருதுக்கு தேர்வானவர்கள். விஜயகாந்த் - கலை(தமிழகம்) ஃபாத்திமா ஃபீவி - பொது விவகாரங்கள்(கேரளா) ஹோர்முஸ்ஜி - இலக்கியம் மற்றும் கல்வி(மகாராஷ்டிரா) மிதுன் சக்ரவர்த்தி - கலை(மேற்கு வ...
2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கான் நடித்தவை என்ற புதிய சாதனை!

2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கான் நடித்தவை என்ற புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'பதான்'- ஓராண்டு நிறைவு ! 'ஜவான்'- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..! இதயத்தை வருடும் கதையுடன் வெளியான 'டங்கி' திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்...2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.! ஷாருக்கான் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே (பதான்) மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கியதன் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதைத்தொடர்ந்து 'ஜவான்', 'டங்கி' என பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து இந்த ஆண்டு முழுவதும் திரையுலகில் ஆட்சி செய்து ஆதிக்கம் செலுத்தினார். இந்நிலையில் 'பதான்' வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும், ஷாருக்கானின் 'ஜவான்', 'டங்கி' என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை வழங்கியதால் அவரது ரசிகர்கள் ஷாருக்கின் படங்களை நினைவுக்கூறுகிறார்கள். பதானுக்கு ...
அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ராஃபின் இணைந்த ஆக்சன் திரில்லர்

அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ராஃபின் இணைந்த ஆக்சன் திரில்லர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அக்‌ஷய் குமார், டைகர் ஷ்ராஃபின் ஆக்சன் திரில்லர்! வெளியானது Bade Miyan Chote Miyan டீஸர்! அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் ராணுவ வீரர்களாக நடிக்கும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் அதிரடி டீசர் வெளியாகி உள்ளது. https://www.youtube.com/watch?v=S1paPy2dpYk இந்த ஜனவரியில் ரசிகர்கள் பலரும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். படத்தின் கவர்ச்சியான போஸ்டர்கள் மற்றும் கிலிம்ஸை தொடர்ந்து தற்போது படக்குழு டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு அதிரடி ஹீரோக்கள் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் படமான இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதல் முறையாக ஒன்றாக நடித்துள்ளனர். வசீகரிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள...
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி ரிலீஸ்!

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது* *ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியீடு* இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமா...
“வடக்குப்பட்டி ராமசாமி” படத்தில் பெரியார் குறித்த சர்ச்சை சந்தானம் விளக்கம் அளிப்பார் – எஸ்கேப் ஆன இயக்குனர்

“வடக்குப்பட்டி ராமசாமி” படத்தில் பெரியார் குறித்த சர்ச்சை சந்தானம் விளக்கம் அளிப்பார் – எஸ்கேப் ஆன இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வடக்கு பட்டி ராமசாமி பட டிரைலரில் பெரியார் குறித்த அவதூறு சர்ச்சை தமிழகம் முழுவதும் எழுந்த நிலையில் அதன் இயக்குனர் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “படத்தில் இடம் பெற்ற அந்த வசனம் தந்தை பெரியாரை அவமதிக்கும் வசனமல்ல. காட்சிக்காகச் சேர்க்கப்பட்ட ஒரு வசனம்தான் அது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதற்குரிய விளக்கத்தை சந்தானம் கண்டிப்பாகக் கொடுப்பார். பக்தியை வைத்து பணம் சம்பாதிக்கும் சிலரைப் பற்றிய கதைதான் இந்தப் படம். 70களில் நடக்கும் கதை. அப்போது ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் பரவியது. அதை வைத்தும் படத்தின் திருப்புமுனை காட்சிகளை அமைத்துள்ளோம். ஒரே கட்டமாக 63 நாட்களில் படத்தை முடித்தோம். எனது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ படம் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு படமாக அமைந்தது. அதனால், அடுத்த படத்தை கடந்த காலத்தைப் பற்றிய ஒரு படமாக எடுக்க வேண்டும் என இப்படத்தை எடுத்த...
கேப்டன் மில்லர் திருட்டுக்கதையா?! பிரபல எழுத்தாளர் பகீர் ????  Dhanush I VelaRamamoorthy I Kodanki

கேப்டன் மில்லர் திருட்டுக்கதையா?! பிரபல எழுத்தாளர் பகீர் ???? Dhanush I VelaRamamoorthy I Kodanki

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  கேப்டன் மில்லர் திருட்டுக்கதையா?! பிரபல எழுத்தாளர் பகீர் ???? Dhanush I VelaRamamoorthy I Kodanki   https://youtu.be/VV2w-AZpSvg
பகிரங்க மன்னிப்பு… “ஜெய் ஸ்ரீராம்” சொன்ன பின்னணியில் மிரட்டப்பட்ட நயன்தாரா!? கோடங்கி பார்வை????

பகிரங்க மன்னிப்பு… “ஜெய் ஸ்ரீராம்” சொன்ன பின்னணியில் மிரட்டப்பட்ட நயன்தாரா!? கோடங்கி பார்வை????

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பகிரங்க மன்னிப்பு... "ஜெய் ஸ்ரீராம்" சொன்ன பின்னணியில் மிரட்டப்பட்ட நயன்தாரா!? கோடங்கி பார்வை????   https://youtu.be/tAGHTnIZKJQ
“ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் T.D.ராஜா பேசியதாவது.. இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு மிகக்கடினமாக உழைத்துள்ளனர். மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் டைரக்டர் என ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். நடிகை ரியா சுமன் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். தனா சார் 24 மணி நேரமும் இந்தப்படத்தையே நினைத்துக் கொண்டிருப்பார். இரவு பகலாக படத்திற்காக உழைத்துள்ளார். விஜய் ஆண்டனி மனிதநேய மிக்க மாமனிதன் அவர். அவரது சொந்தப் ப...