வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

Author: Kodanki

பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா !

பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....
கரண் ஜோகர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

கரண் ஜோகர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
பாலிவுட் பிரபலங்களில் ஒருவர் கரண் ஜோகர். 50 வயதான இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் ஷாருக்கானின் வெற்றிப்படமான 'குச் குச் ஹோத்தா ஹை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இவர் காபி வித் கரண் என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கரண் ஜோகர் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறி உள்ளார். தனது சமூக வலைதள கணக்கை நீக்கியுள்ள கரண் ஜோக்கர் இது குறித்து தனது கடைசி பதிவு மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "அதிகளவில் பாசிட்டிவ் எனர்ஜியை விரும்புகிறேன். அதன் முதல் படியாக சமூக வலைதளத்தில் இருந்து விலகுகிறேன். குட் பை" என தெரிவித்து உள்ளார். அண்மைக் காலமாக பாலிவுட் சினிமாவுக்கு எதிராக புறக்கணிப்பு முழக்கங்கள் முன்னெடுக்கப்படுவதால் கரண் இவ்...
திரைத்துறையில் கலமிறங்கும் டோனி.. வெளியான தகவல்..!

திரைத்துறையில் கலமிறங்கும் டோனி.. வெளியான தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விளையாட்டு செய்திகள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல தொழில்களில் பிசியாக இருக்கும் இவர் 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதற்கு முன்பு இவரது தயாரிப்பில் 'ரோர் ஆப்தி லையன்' என்ற ஆவண படம் ஹாஸ்டாரில் வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படம் ஒன்றையும் புராணத்தை அடிப்டையாகக் கொண்டு திரில்லர் படம் ஒன்றையும் தோனி பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் தோனி, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படங்கள் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
மஹிந்திரா பிக்சர்ஸ் production no.1  திரைப்படம்  பிரமாண்டமாக தொடங்கியது!

மஹிந்திரா பிக்சர்ஸ் production no.1  திரைப்படம்  பிரமாண்டமாக தொடங்கியது!

Uncategorized
Gunas entertainment's சாய் கார்த்திக் வழங்கும் மஹிந்திரா பிக்சர்ஸ் (Mahindhra Pictures)பேனரில்  தமிழ் மற்றும் தெலுங்கு  மொழிகளில் வி.ஸ்ரீனிவாச ராவ் தயாரித்துள்ள "புரொடக்‌ஷன் நம்பர்.1" திரைப்படம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. சைதன்யா கதாநாயகனாக , ரித்திகா கதாநாயகியாக நடிக்கிறார்கள்.  இந்த படத்தின் தொடக்க விழா, பூஜை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன், நடிகர் ஆகாஷ் பூரி வருகை தந்தார். முதல் காட்சிக்கு கிளாப் (Clap) அடித்து தொடங்கி வைத்தார் ஹீரோ பூரி ஆகாஷ். பின்னர் படக்குழு ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்.. திரைப்பட இயக்குனர் சின்ன வெங்கடேஷ் பேசுகையில் "அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள். நான் சொன்ன கதை பிடித்ததால் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார் தயாரிப்பாளர் வி.சீனிவாச ராவ். அவர்களுக்கு என் நன்றிகள். ஹீரோ ஆகாஷ் பூரி, தயாரிப...
இயக்குனர் ராம் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன் !

இயக்குனர் ராம் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் இதுவ...
விடுமுறையை கொண்டாட ஒன்றாக மாலத்தீவு சென்ற ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா!

விடுமுறையை கொண்டாட ஒன்றாக மாலத்தீவு சென்ற ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்று போனது. மேலும் சிலருடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார். தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இந்த படம் வசூலை அள்ளியது. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரி தான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. டியர் காம்ரேட் படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகி...
கூவம் நதி சீர் செய்யப்பட்டு சென்னை, லண்டனுக்கு இணையாக மாற்றப்படும்- அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி !

கூவம் நதி சீர் செய்யப்பட்டு சென்னை, லண்டனுக்கு இணையாக மாற்றப்படும்- அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன. அதை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும். கூவம் நதி சென்னை முழுவதும் ஒடும் நதி. மழை காலத்திற்கு பின்னர், கூவம் நதியை சீர் செய்யும் நடவடிக்க...
கிராம உதவியாளர் காலியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்- தமிழக அரசு உத்தரவு!

கிராம உதவியாளர் காலியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்- தமிழக அரசு உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:- ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி நிலவரப்படி, காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க கலெக்டர்கள் அந்த தகவலை அளித்துள்ளனர். இதில் 1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்புமாறு அறிவுறுத்திய...
பிரபாஸ் படத்திற்கு வந்த புதிய சிக்கல் !

பிரபாஸ் படத்திற்கு வந்த புதிய சிக்கல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த டீசர் வெளியிட்டு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஆ...
இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி- தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்!

இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி- தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி அணி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி, ராகுல், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் விளையாடுகின்றனர். இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணியை ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்க...