வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

Author: Kodanki

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வீடு திரும்பினார்!

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வீடு திரும்பினார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வீடு திரும்பினார் கொரோனாவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் கவனித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதுகு வலியால் அவதியடைந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 2 மணி நேரம் நடைபெற்ற பரிசோதனைக்கு பின்னர், முதலமைச்சர் வீடு திரும்பினார். இதுதொடர்பாக, ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான உடல் பரிசோதனை நடைபெற்றதாகவும், முதுகுவலிக்காக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது....
சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கபட்டார். அந்நாட்டு வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரமதமரானது இதுவே முதல் முனறயாகும். ரஷி சுனக்கின் மனைவி பெயர் அக்‌ஷயா மூர்த்தி . இவர் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக்-அக்‌ஷதா மூர்த்தி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இங்கிலாந்தில் போரிஸ்ஜான்சன் பிரதமராக இருந்த போது ரிஷி சுனக் நிதி மந்தரியாக இருந்தார். அந்த சமயம் அவர் லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-வது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மேற்கு லண்டனில் இருக்கும் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். மகள்கள் படிக்கும் பள்ளி இதன் அருகில் இருப்பதால் அவர் இந்த வீட்டில் க...

பிலிப்பைன்ஸ் நாட்டின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடிய ‘நால்கே’ புயல்! பேய் மழை!!

flood news, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடிய 'நால்கே' புயல்! பேய் மழை!! தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன. இவை மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன. இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதன் எதிரொலியால் பிலிப்பைன்சை தாக்கும் புயல்கள் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங...
நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னை பலர் திட்டியிருக்கிறார்கள் – “செம்பி” இசை விழாவில் கமல்!

நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னை பலர் திட்டியிருக்கிறார்கள் – “செம்பி” இசை விழாவில் கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  செம்பி இசை வெளியீட்டு விழா !!! Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது… பிரபு சாலமன் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எங்கு இப்படியான இடங்களை பிடிக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது. கோவை சரளா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமல் சார் ஒரு பட விழாவிற்கு வந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். நடிகை கோவை சரளா பேசியதாவது... இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் பட...
11:11 தயாரிப்பில் டாக்டர் பிரபு திலக் வழங்கும் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’!

11:11 தயாரிப்பில் டாக்டர் பிரபு திலக் வழங்கும் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
11:11 தயாரிப்பு நிறுவனம் டாக்டர். பிரபு திலக் வழங்கி வரும் படங்கள் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நடராஜன் சுப்ரமணியம் மற்றும் நரேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'யூகி' படத்தை வழங்குகின்றனர். 11:11 புரொடக்‌ஷன்ஸ், டாக்டர் பிரபு திலக் பேசுகையில், "'யூகி' படத்தின் உரிமையை 11:11 புரொடக்‌ஷன் வாங்கியிருப்பதில் மகிழ்ச்சி. படத்தில் கடுமையான தரமான உழைப்பை வழங்கி இருக்கும் அணியோடு இணைந்திருக்கிறோம் என்பதில் பெருமை. பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வகையிலான சிறப்பான சில அம்சங்கள் இந்தக் கதையில் உள்ளது. 11:11 புரொடக்‌ஷன்ஸ் எப்போதுமே தனித்துவமான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும். அந்த வரிசையில் 'யூகி' படமும் நிச்சயமும் தனித்துவமான கதையாக அமையும் நடிகர்கள் கதிர், நடராஜன் சுப்பிரம...
நர்மதாவை கரம்பிடித்த ஹரிஷ் கல்யாண்.. குவியும் வாழ்த்துகள்!

நர்மதாவை கரம்பிடித்த ஹரிஷ் கல்யாண்.. குவியும் வாழ்த்துகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிக்கை ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில், "எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஹ...
“இம்சை அரசனை” தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!

“இம்சை அரசனை” தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இம்சை அரசனை தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!   காமெடி நடிகர் வடிவேலு எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இதில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பு இன்னமும் மக்கள் மனசில் நிலைத்து நிற்கிறது. இதற்கு வடிவேலு மட்டுமல்ல அப்படி கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய சிம்புதேவனும் மிக முக்கியம். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் பார்ட் 2 மூலம் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் பார்ட் 2 அறிவிப்பு அறிவிப்பாகவே போய்விட்ட்து. இந்த சூழலில் சிம்புதேவன் அடுத்து எந்த அறிவிப்பும் தராமல் பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். அதே நேரம் வடிவேலு விட்ட இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டம் இஷ்டம் போல வந்து கொட்டுகிறது ...
81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா

81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா*   பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, படத்தொகுப்பு ஆர். கே. ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்தி...
இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்* “நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையர...
வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் விஷயத்தில் விக்னேஷ்சிவன் – நயன் தாரா தம்பதி சட்ட விதிகளை மீறவில்லை – தமிழக அரசு அறிவிப்பு

வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் விஷயத்தில் விக்னேஷ்சிவன் – நயன் தாரா தம்பதி சட்ட விதிகளை மீறவில்லை – தமிழக அரசு அறிவிப்பு

Uncategorized
நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த விவகாரத்தில் விதிமீறல் எதுவும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர். இச்செய்தியை தொடர்ந்து இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் 13.10.2022 உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் அத்தம்பதியர் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது. அம்மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்த...