மஹிந்திரா பிக்சர்ஸ் production no.1 திரைப்படம் பிரமாண்டமாக தொடங்கியது!
Gunas entertainment's சாய் கார்த்திக் வழங்கும் மஹிந்திரா பிக்சர்ஸ் (Mahindhra Pictures)பேனரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வி.ஸ்ரீனிவாச ராவ் தயாரித்துள்ள "புரொடக்ஷன் நம்பர்.1" திரைப்படம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.
சைதன்யா கதாநாயகனாக , ரித்திகா கதாநாயகியாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் தொடக்க விழா, பூஜை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன், நடிகர் ஆகாஷ் பூரி வருகை தந்தார். முதல் காட்சிக்கு கிளாப் (Clap) அடித்து தொடங்கி வைத்தார் ஹீரோ பூரி ஆகாஷ்.
பின்னர் படக்குழு ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்.. திரைப்பட இயக்குனர் சின்ன வெங்கடேஷ் பேசுகையில் "அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்.
நான் சொன்ன கதை பிடித்ததால் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார் தயாரிப்பாளர் வி.சீனிவாச ராவ். அவர்களுக்கு என் நன்றிகள்.
ஹீரோ ஆகாஷ் பூரி, தயாரிப...









