வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

Author: Kodanki

இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’

இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் 'தடை உடை'* *விரைவில் நிறைவடையவிருக்கும் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படபிடிப்பு* சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான 'தடை உடை' எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்...
சலார் படத்தின் அப்டேட்!

சலார் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தின் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த நிலையில் சலார் படத்தின் அப்டேட் குறித்த தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பகல் 12.58 மணிக்கு சலார் படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது....
சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது.. தமன்னா ஆதங்கம்!

சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது.. தமன்னா ஆதங்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. சிம்ரனுக்கு அடுத்து இடையழகி என்று தமன்னா ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர். தமிழ் பட உலகின் தங்க நிறத்தழகிகளில் ஒருவரான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள். கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது. இந்த போக்கு சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது" என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், ''கதாநாயகிகளின் புகைப்படம் பட 'போஸ்டர்'களில் வருவதே பெரிய விஷயம். பட விழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள். அதேவேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்ட...
மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ண கொடியையையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தை மலிவுபடுத்தி இருக்கின்றனர். அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், தேசிய கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இது தமிழ்நாடு இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். தாங்கள்தான் தேசப்பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைகாரர்கள் என நினைத்து வரம்...
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்!

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், ...
விருமன் வசூலில் வேகமெடுப்பானா? படுத்துக் கொள்வானா? – கோடங்கி விமர்சனம்

விருமன் வசூலில் வேகமெடுப்பானா? படுத்துக் கொள்வானா? – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பழைய கிராமத்து உறவுகளின் கதைதான்… என்ன கொஞ்சம் கமர்சியல், காதல் கலாட்டா அடிதடிஆக்‌ஷன் மசாலா கலந்து கார்த்திக்காகவே எடுக்கப்பட்ட விருமன்.   சரி கதைக்கு வருவோம்… முனியாண்டி கேரக்டரில் வரும் பிரகாஷ்ராஜ்-சரண்யாபொன்வண்ணன் தம்பதிக்கு விருமன் கேரக்டரில் வரும் ஹீரோ கார்த்தி உள்ளிட்ட 4 பிள்ளைகள். முனியாண்டி மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தனாம தொடர்பு வைத்ததை பார்த்த முனியான்டி மனைவி தீக்குளித்து சாகிறார். கண்முன் தாய் தீயில் கருகுவதை கண்டு தந்தை பிரகாஷ்ராஜ் மீது கடும் ஆத்திரம் கொள்ளும் விருமன் அவரை கொல்ல முயலும் நிலையில் தாய்மாமன் பேச்சை கேட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு அவர் வீட்டிலேயே வளர்கிறார். ஆனாலும் தந்தைக்கும் மகனுக்கு இடையே மோதல் ஓயவில்லை. எப்படியாவது விருமனை ஒழித்துக்கட்ட பிரகாஷ்ராஜ் முயல்கிறார். இதற்கிடையில் பிரகாஷ்ராஜின் மற்ற 3 மகன்களும் ஒரு கட்டத்தில் ஒவ்வொரு...
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலோகங்களை பிரித்து கூறும் கருவியுடன் ஆய்வாளர்கள் ஆய்வுப்பணியில் தீவிரம் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில், திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இந்த அகழாய்வ...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்ட மரக்கன்று! கதறி அழுத தாயார்!!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்ட மரக்கன்று! கதறி அழுத தாயார்!!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று நடப்பட்டது! கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் 17 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு அவரது தந்தை  அருகில் உள்ள நகரமான வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில்  பொதுமக்களுக்கு  2000 மரக்கன்றுகள் வழங்க வேப்பூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு வேப்பூர் காவல் நிலையத்தில் ஸ்ரீமதியின் குடும்பத்தினர் மரக்கன்று வழங்க அனுமதி கேட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் எனவும், மேலும் அந்த இடம் அதிக மக்கள் கூடும் இடம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்திருந்தனர். இதனையடுத்து ஸ்ரீமதியின்  சொந்த கிராமத்திலேயே அவரது பெற்றோர்கள் மரக்கன்று வழங்குவது என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பெரியநெசலூர் கிராமத்தில் ஸ்ரீமதி உடல் அடக்கம் ...
சீதா ராமம் கோடங்கி விமர்சனம்

சீதா ராமம் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  காஷ்மீரில் ராணுவ வீரராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு சீதா மகாலட்சுமி என்ற பெயரில் முகவரி இல்லாமல் தொடர்ந்து காதல் கடிதங்கள் வருகிறது. கடிதம் எழுதும் பெண்ணை தேடிக் கண்டு பிடித்து, பின்னர் இருவரும் காதலை தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதியை கொல்லும் பணி துல்கர்சல்மானுக்கு வருகிறது. இதற்காக எல்லை தாண்டி செல்கிறார். அவர் திரும்பி வந்தாரா? சீதா மகாலட்சுமி யார்? இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை. நடிப்பின் மூலம் படத்தை துல்கர்  அழகாக நகர்த்துகிறார். காதலி மிருணாள் தாகூரிடம் வெளிப்படுத்தும் காதல், காஷ்மீர் மோதலை தடுக்கும் விவேகம், எல்லை தாண்டி எதிரிகளை வீழ்த்தும் வீரம், சிறை சித்ரவதை என்று கதாபாத்திரத்தில் துல்கர் கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் . அவரது காதலியாக வரும் மிருணாள் தாகூர் அழகு பதுமை. கொஞ்ச நேரம் வந்தாலும்...
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும், கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று கனல் கண்ணன் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்....