சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Author: Kodanki

வாக்குறுதி அளித்தபடி காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- விஜயகாந்த்!

வாக்குறுதி அளித்தபடி காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- விஜயகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. 2013, 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இ...
மீனா கணவர் மறைவு!

மீனா கணவர் மறைவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர்கரும் இயக்குனருமான சுந்தர்.சி மற்றும் நடிகர் நாசர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளனர்....
மீண்டும் தள்ளிப் போன மஹா.. வைரலாகும் போஸ்டர்!

மீண்டும் தள்ளிப் போன மஹா.. வைரலாகும் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மஹா. இதில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதன்படி, ஜூலை 22-ஆம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'வாலு' திரைப்படத்திற்கு பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மஹா'. இத்திரைப்படம் ஹன்சிகாவின் 50-வது படம் என்ப...
தன் பாடலை ரீமிக்ஸ் செய்யும் விஜய்!

தன் பாடலை ரீமிக்ஸ் செய்யும் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் இயக்குனர் வம்சி. விஜய் நடிப்பில் குடும்பக்கதையுள்ள படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தப் படத்தை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அண்ணன், தங்கை உறவுகளின் பாசப் போராட்டக் களத்தை விவரிக்கும் இந்தக் கதை குடும்ப ரசிகர்களின் எண்ணிக்கையை விஜய்க்கு அதிகரிக்கும் என்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் முக்கியமான இடத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் விஜய் படத்தின் பாடலையே ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தெரிகிறது. அதன்படி 2002-ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் மனதை கொள்ளையடிதத "ஆல்தோட்ட பூபதி நானடா" என்ற பாடலை வாரிசு படத்தில் ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்பாடலை மணிஷர்மா இசையமைத்திருந்ததால் அவரிடம் இது குறித்து பேச்சு வார்த்த...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய தலைவரானார் ஆகாஷ் அம்பானி!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய தலைவரானார் ஆகாஷ் அம்பானி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை சேர்த்தது என டிராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ நீடிக்கிறது. இதற்கிடையே, ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஆனால், அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளுக்கும் சொந்தமான முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் தலைவராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார். இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குனராகவு...
ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு – சத்யராஜ் பெருமிதம்

ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு – சத்யராஜ் பெருமிதம்

Uncategorized
  ரசிகர்களின் கைதட்டல்களை பெற்ற 'மாயோன்' படக்குழுவினர் தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த 'மாயோன்' தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. 'மாயோன்' திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் அதிர கரவொலி எழுப்பி, 'மாயோன்' படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை நேரில் பார்த்து வியந்த சத்யராஜ், 'ரசிகர்களின் கைத்தட்டல்கள் தான் மாயோன் படத்திற்கு கிடைத்த பாராட்டு' என்றார். டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மாயோன்'. யாரும் எளிதில் யூகிக்க இயலாத காட்சிகளை அமைத்து படத்தை நேர்த்தியாக அறிமுக இயக்குநர் கிஷோர்...
அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம்!

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. கன்னியாகுமரியில் நடைபெற்ற போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இது தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:- இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்க செய்து, இந்திய ராணுவத்தின் தரத்தை கேள்வி குறியாக்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினோம். ...
இரவின் நிழல் ரிலீஸ் தேதியை வெளியிடும் நடிகர் தனுஷ்!

இரவின் நிழல் ரிலீஸ் தேதியை வெளியிடும் நடிகர் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் புதிய அப்டேட்டை பிரபலம் ஒருவர் வெளியிடுவார் என்றும் அப்பிரபலம் என்ற வார்த்தையிலுள்ள மூன்றெழுத்தும் அவர் நடித்துள்ள படத்தின் மூன்றெழுத்தும் ஒன்றாகும் என்று பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி, இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு வெள...
சர்ச்சைக்கு பதிலளித்த மாதவன்!

சர்ச்சைக்கு பதிலளித்த மாதவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அதில் மாதவான் பேசியதாவது, "ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்ச...
23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் குஷ்பு!

23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் குஷ்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் வாரிசு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த விஜய் தனது குடும்பத்துக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு எப்படி முறியடிக்கிறார் என்ற கதையம்சத்தில் படம் தயாராவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விஜய்யின் தந்தையாக சரத்குமாரும் சகோதரராக ஷ்யாமும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் குஷ்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1999-இல் வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்...