ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், முதல் இரண்டு சுற்றுக்களில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை தோற்கடித்தார். இந்நிலையில்   இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை ஆனந்த் வீழ்த்தினார். இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்....
சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை வலுப்படுத்த நடவடிக்கை- பிரதமர் மோடி பேச்சு!

சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை வலுப்படுத்த நடவடிக்கை- பிரதமர் மோடி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில்  இன்று நடைபெற்ற மாநில முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஒரு நாடு- ஒரே வரி, ஒரு நாடு-ஒரே மின்கட்டமைப்பு, ஒரு நாடு- ஒரே மொபிலிட்டி கார்டு,  ஒரு நாடு-ஒரே ரேஷன் கார்டு ஆகிய முயற்சிகள் அனைத்தும் எங்களின் திடமான மற்றும் தெளிவான கொள்கைகளின் பிரதிபலிப்பு. சமீபத்தில் நாங்கள் 8 வருட ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை ஒரு தேசமாக வலுப்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம். இந்த ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தில் நாங்கள் நாட்டை முன்னேற்றி உள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் எளிதான வணிகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். இன்று உலகம் இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டுகிறது. ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் நாம் வேகமாக வளர்ந்...
சிவா இயக்கத்தில் விஜய்? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

சிவா இயக்கத்தில் விஜய்? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் பல படங்களை இயக்கியதை அடுத்து கார்த்திக் நடித்த சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமானவர் இயக்குனர் சிவா. இதை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் விஜய்யை சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின் போது தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு விஜய், சிவாவிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விஜய்யின் 68-வது படத்தை சிவா இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது....
கீர்த்தி சுரேஷ் அறிக்கை!

கீர்த்தி சுரேஷ் அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நீண்ட அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவதும் உயர்வையும் தாழ்வையும் காண்கிறோம். அதுவே பெரும்பாலும் நமது இலக்கைத் தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு க...
ஊர்வசியின் “வீட்டுல விசேஷம்” காப்பியடிச்ச படமா ? – பதறிய RJ பாலாஜி

ஊர்வசியின் “வீட்டுல விசேஷம்” காப்பியடிச்ச படமா ? – பதறிய RJ பாலாஜி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  ஊர்வசியின் "வீட்டுல விசேஷம்" காப்பியடிச்ச படமா ? - பதறிய RJ பாலாஜி   https://youtube.com/shorts/CGsYHsi8StU
14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  "கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்" 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு 14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த ...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்  நிலநடுக்கம்!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஜிங், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரித்தது. பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. 17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களுக்குப் பிறகு, யானிலும் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் அடுத்தடுத்த ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்த...
காதலியை கரம் பிடித்த தீபக் சஹார்!

காதலியை கரம் பிடித்த தீபக் சஹார்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக  திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர். இவர் வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக பேட் செய்து  ஆல்ரவுண்டரை போல செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணிக்கு தேர்வான இவர், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தீபக் சஹார், தனது காதலி ஜெயாவை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இதில் ராகுல் சாஹர்...
ரஜினியை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்!

ரஜினியை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பு, சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாசர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியதாகவும் தெரிவித்தார்....
சென்னையில் முதல் முதலாக நாளை முதல் ‘மலர் கண்காட்சி’!

சென்னையில் முதல் முதலாக நாளை முதல் ‘மலர் கண்காட்சி’!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஏராளமான வண்ண வண்ண மலர்கள் கலைவாணர் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த மலர் கண்காட்சி நாளை முதல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம். இதற்கு நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ரூ.20-ம், பெரியவர்களுக்கு ரூ.50-ம் நிர்ணயம் செய்துள்ளனர்....