ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கடைமடைப் பகுதி விவசாயத்திற்கும் தண்ணீர் சென்று சேரும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணி நிறைவுடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி செல்கிறார். அங்கு ஆய்வு செய்த பின்னர் கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு செல்கிறார். வேளாங்கண்ணியில் மு.க.ஸ்டாலின் இரவு தங்குகிறார். நாளை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய...
பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை!

பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனிக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலர் ஷோல்ஸ் ஆகியோரிடம் ரஷிய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசினார். ...
பிக்பாஸ் பிரபலம் மதுமிதாவுக்கு குழந்தை பிறந்தது!

பிக்பாஸ் பிரபலம் மதுமிதாவுக்கு குழந்தை பிறந்தது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
2012-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ராஜா ராணி, காஞ்சனா 2, ஸ்கெட்ச், விஸ்வாசம், டிக்கிலோனா என பல தமிழ் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.     2019-ம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை மதுமிதா திருமணம் செய்துக் கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுமிதாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தின. இந்நிலையில், மோசஸ் - மதுமிதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
கே.ஜி.எப்.-2 படத்தால் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

கே.ஜி.எப்.-2 படத்தால் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். என்ற தங்க வயல் கோட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் கே.ஜி.எப். இதன் 2ம் பாகம் கே.ஜி.எப். சேப்டர் 2 என்ற பெயரில் புது வருட தினத்தில் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த, நடிகர் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூலில் பல நூறு கோடிகளை கடந்து சாதனை படைத்தது. வேகமும், விறுவிறுப்பும் கலந்து சண்டை பிரியர்களுக்கு தீனி போட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், அதில் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. அவர்களது மனதில் இருந்து நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்த படத்தினை தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள 15 வயது சிறுவன் 2 நாட்களில் 3 முறை பார்த்திருக்கிறான். அதில் ராக்கி பாய் வேடத்தில் வரும் நடிகர் யஷின் நடிப்பில் ஈர்க்கப்பட்டு உள்ளான். இதனால், ஒரு முழு ...
4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்!

4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நேபாளத்தில் 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் 9 என்ஏஇடி விமானத்தின் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளது. நேபாளத்தில் காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து  ஜோம்சோமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்....
வைரலாகும் அக்னிக் சிறகுகள் டீசர்!

வைரலாகும் அக்னிக் சிறகுகள் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். மூடர்கூடம் நவீன் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்நிலையில் 'அக்னிக் சிறகுகள்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள 'அக்னிக் சிறகுகள்' படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது....
போத்தனூர் தபால் நிலையம்  கோடங்கி விமர்சனம்

போத்தனூர் தபால் நிலையம் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  Casting : Praveen, Anjali Rao, Venkat Sundar, Jagan Krish, Seetharaman, Sambath Kumar, Deena Angamuthu Directed By : Praveen Music By : Tenma - Allen Sebastian (Additional Background Score) Produced By : Passion Studios - Bicycle Cinemas   தமிழ் சினிமாவில் சமீபத்திய புதுவரவு இயக்குனர்கள் எல்லாம் தங்கள் முதல் படைப்பில் “சபாஷ்” வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் போத்தனூர் தபால் நிலையம் படத்தின் ஹீரோ கம் இயக்குனர் பிரவீனுக்கும் “சபாஷ்” போடலாம்! 1990 கால கட்ட கதை. பொதுவாக பீரியட் கதைகளில் காட்சிகளுக்கும், உடைகளுக்கும் பயன்படுத்தும் பொருட்களுக்கும் அதிக கவனம் கொடுத்தால் கதையை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஆனால், பிரவீன் இந்த இரண்டிலும் நன்றாகவே அடித்து ஆடி இருக்கிறார். கதைப்படி, கம்ப்பூட்டர் தொழில் செய்ய கடனுக்கு அலைகிறார் நாயகன் பிரவீன். அ...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை '2டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதனிடையே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இந்நிலைய...
தனுஷின் அடுத்த பட நாயகி!

தனுஷின் அடுத்த பட நாயகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதற்கிடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை 'சத்யா ஜோதி ஃபிலிம்ஸ்' சார்பாக தியாகராஜன் தயாரிக்கிறார். டார்க் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இப்படத்திற்கு 'கேப்டன் மில்லர்' என பெயரிடப்பட்டுள்ளது.   இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தில் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரியங்கா மோகனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவ...
வைரலாகும் அந்தகன் படத்தின் பாடல்!

வைரலாகும் அந்தகன் படத்தின் பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். அந்தகன் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து இதற்குன் வெளியான ம...