மறைந்த நடிகர் விவேக்கிற்கு கிடைக்கும் கவுரவம்!
திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி திடீரென்று இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகில் தனது முற்போக்கு சிந்தனையால் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலம் நடித்துக் காட்டியவர்.
இதனால் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். நடிகர் விவேக் இறந்து ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை விவேக்கிடம் மேலாளராக பணியாற்றிய செல் முருகன் மற்றும் விவேக் பசுமை கலாம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. தலைமை நிலையப் பொறுப்பாளரும், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவருமான பூச்சி முருகன் பேசியதாவது, நடிகர் விவேக் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
சமூகத்திற்கான நல்ல கருத்துக்களை விதைத்தவர்.
தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு ...









