தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார்.
இப்படத்தில் யஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
அதன்படி, முதல் நாள் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்....
இயக்குனர் வெற்றிமாறன் “ நாம்” அறக்கட்டளையின் சார்பாகத்திரை பண்பாடு ஆய்வகத்தைத் தொடங்கி உள்ளார்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து அவர்களின் வீடுகளுக்கு நேரடி யாகச் சென்று, உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்பு நிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா?
தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளைக் கட்டண மில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச்சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி எஸ்.தாண...
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்துதான் சர்ச்சையை பெரும் விவாதத்தைத் தூண்டியிருக்கி...
தயாரிப்பாளர் கே.ராஜன், “’தொடாதே’ பாடல்களையும் டிரைலரையும் பார்த்த போது படம் நல்ல கருத்தை சொல்ல வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
காதல் சுகுமார் காமெடி நடிகராக இருக்கும் போதே அவரை நான் ரசித்து பார்ப்பேன். இன்று ஹீரோவாக நடிக்கிறார் அவர் நிச்சயம் நன்றாக நடித்திருப்பார்.
சிறிய படம், பெரிய படம் என்று சொல்வார்கள், உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பெரிய வெற்றி பெறும் படங்கள் தான் பெரிய படம், பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்களே சிறிய படம்.
பல கோடி செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். 100 கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம், 30 கோடி ரூபாய் தான் வசூலிக்கிறது.
ஆனால், ஹீரோக்கள் மட்டும் சம்பளத்தை 110 கோடி ரூபாய் என்று உயர்த்தி விடுகிறார்கள்.
இப்ப கூட ஒரு நடிகர், 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தவர், 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம...
நடிகர் சிவகுமார் பேசுகையில், '' வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் படைப்புகளைப் போல் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் இது.
நானும் கிருஷ்ணன் பஞ்சு போன்ற ஏராளமான இயக்குநர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.
இந்தப்படத்தில் ஏழெட்டு குழந்தைகளுடன் இயக்குநர் மிகவும் பொறுமையாக காத்திருந்து, காட்சிகளை விளக்கிச் சொல்லி படமெடுத்திருக்கிறார்.
இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது.
எனக்கும், என்னுடைய நண்பர் விஜயகுமாருக்கும் இடையே 55 ஆண்டுகளுக்கு மேலான நட்பு இருக்கிறது.
1967 ஆம் ஆண்டில் ‘கந்தன் கருணை’ படத்தில் முருகனாக வேடமிட்டேன்.
விஜயகுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சிவாஜி நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ வள்ளி’ படத்தில் பேபி முருகனாக வேடமிட்...
நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர்.
இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர். ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா,
கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், '' ஓ மை டாக், வால்...
ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது, அரசியல் ஆதாயங்களுக்காக இதுவரை எந்த முடிவையும் எடுத்ததில்லை.
விளிம்பு நிலை மக்களுக்கு பாடுபட வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் மட்டுமே முடிவுகளை எடுத்து வருகிறேன். இதை தொடர வேண்டிய வரலாற்று கட்டாயம் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பேச எழும்போதெல்லாம் பதட்டமாக தான் இருப்போம். முக்கிய கட்சிகள் பேசி முடித்தபின் தான் நான் பேச வேண்டிய நிலை வரும். மற்ற உறுப்பினர்கள் பேசுவதை உள்வாங்கிக் கொண்டு அவர்கள் பேசாததை பேசுவேன்
கர்நாடகாவில் ஹிஜாப்க்கு எதிராக சங் பரிவார் கும்பல் தூண்டிவிட்டு மாணவ சமூகத்தை பி...
உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இதற்கிடையே, கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது. இதனை கவர்னர் மக்சிம் மார்சசென்கோவும் உறுதியளித்தார். ஆனால் ரஷியா இதற்கு மறுப்ப தெரிவித்தது.
இந்நிலையில், கருங்கடலில் ரஷியாவின் போர்க்கப்பல் மூழ்கியது என்றும் வெற்றகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால், கப்பலில் வெடிமருந்து வெடித்ததால்தான் தீப்பிடித்தது என்றும், அதன் ...
ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாநிலங்களுக்கு தரப்படும் ஜி.எஸ்.டி. இழப்பீடு ஜூன் மாதத்திற்கு பின் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு கூறியிருந்தது.
இதை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு திட்டத்தை நிறுத்தினால் வரும் ஆண்டில் 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
இது சத்தீஸ்கர் போன்ற உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும். உற்பத்தி மாநிலமாக இருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும்...