திங்கட்கிழமை, ஜூலை 13
Shadow

Author: Kodanki

அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு!

அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சீனா பெய்ஜிங்கில் இன்று காலை 9.26 மணிக்கு (பெய்ஜிங் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அதிர்வு அருணாச்சலப் பிரதேசத்தில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை....
மாசாக  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்த சூர்யா!

மாசாக தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்த சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர். அப்படம் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அப்படத்திற்காக அவர் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், சூர்யா தான் வளர்க்கும் காளையுடன் 'என் தமிழ்..' இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறி அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   https://twitter.com/Suriya_offl/status/1514528517769535492?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1514528517769535492%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcinema.maalaimalar.com%2Fcine...
விஜய்யின் beast பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? கோடங்கி விமர்சனம்

விஜய்யின் beast பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம், வீடியோ
விஜய்யின் beast பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? கோடங்கி விமர்சனம்     https://youtu.be/drfIm52Bbig
ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து குரல் கொடுக்கும் சிம்பு, அனிருத்!

ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து குரல் கொடுக்கும் சிம்பு, அனிருத்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும் வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். மேலும் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழணங்கு’ என்ற படத்தை பதிவிட்டார். அந்த படத்தில், “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற பாரதிதாசனின் வரிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பி...
கலைவாணர் அரங்கில் மேயர்கள்-துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு பயிற்சி!

கலைவாணர் அரங்கில் மேயர்கள்-துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு பயிற்சி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், கடந்த 2 நாட்களுககு முன்பு மாமன்ற கூட்டத்தை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் நடந்தாலும் பெரும்பாலான மேயர்கள் இந்த பதவிக்கு புதிது என்பதால் மன்ற கூட்டத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு முழுமையாக விதிகள் பிடிபடவில்லை. இதேபோல் நகராட்சி மன்ற கூட்டங்களிலும் பல தலைவர்களுக்கு கூட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையொட்டி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கு நிர்வாக பயிற்சி கொடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் சென்னை, தாம்பரம், ஆவடி உள்பட 21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்க...
பொருளாதார நெருக்கடியிலும் இலங்கையில் குவிந்த பீஸ்ட் ரசிகர்கள்!

பொருளாதார நெருக்கடியிலும் இலங்கையில் குவிந்த பீஸ்ட் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பீஸ்ட்' படம் உலகம் இன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது. இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது வழக்கம் போல், விஜய்யின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலமாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கை, கொழும்பு நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விஜய் படமான ‘பீஸ்ட்’ ரிலீசாகி உள்ளது. கடும...
ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்த பார்த்திபன் சினிமா!

ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்த பார்த்திபன் சினிமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன நடிகர்-இயக்குநர் ஆர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, அவரது இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இந்த கவுரவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பார்த்திபன், தனது தனித்துவமான முயற...
வீழ்ச்சி அடையும் உள்நாட்டு உற்பத்தி – உக்ரைன் ரஷிய போர்!

வீழ்ச்சி அடையும் உள்நாட்டு உற்பத்தி – உக்ரைன் ரஷிய போர்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
நேட்டோ உறுப்பினராக இல்லாத ஆஸ்திரியா நாட்டின் அதிபர் கார்ல் நெஹமர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்தார். அப்போது, உக்ரைனுடனான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லையெனில் இரு பக்கமும் சேதங்கள் ஏற்படும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.  உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும். சாலைகளில் ஆங்காங்கே உடல்கள் கிடத்தப்பட்டுள்ளன என அந்த நகர மேயர் பாய்சென்கோ தெரிவித்துள்ளார். மொபைல் டிரக்குகள் மூலம் தகனங்கள் செய்யப்படுகின்றன. டிரக்குகளில் உள்ளே உள்ள குழாய் மூலம் இந்த உடல்கள் எரிக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.  ரஷியா உடனான போர் உக்ரைனின் பொருளாதார உற்பத்தியை இந்த ஆண்டு 45 சதவீதம் வீழ்ச்சி அடையச் செய்யும் என உலக வங்கி கணித்துள்ளது....
வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது!

வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ்மோடி. இவருக்கு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க, வைர நகை கடைகள் இருந்தன. இவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தார். பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்தார். சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்த அவர் பாதி பணத்தை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தவில்லை. 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் அவர் கடன் மோசடி செய்ததாக வங்கிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்ததும் நிரவ் மோடியும் அவரது குடும்பத்தினரும் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். நிரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்தார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. நிரவ் மோடியின் சொத...
தொடரும் பீஸ்ட் தடை.. வருத்தத்தில் ரசிகர்கள்!

தொடரும் பீஸ்ட் தடை.. வருத்தத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது. பயங்கரவாதிகள் வணிக வளாகத்துக்குள் புகுந்து, மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுப்பதும், அவர்களுடன் மோதி மக்களை விஜய் எப்படி மீட்கிறார் என்பதும் கதையாக உள்ளது. பீஸ்ட் படத்தை வெளிநாடுகளிலும் திரையிட அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், குவைத் அரசு பீஸ்ட் படத்தை திரையிடுவதற்கு அனுமதி மறுத்துவிட்டது. பீஸ்ட் படத்தில் பயங்கரவாதிகள் குறித்து சர்ச்சை மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், இதனாலேயே குவைத் தணிக்கை குழு தடை விதித்ததாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர், மலையாளத்தில் வந்த குரூப் ஆகிய படங்களுக்கும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்தை திரையிட தற்போது தடை விதித்து ...