*சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு*
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தங்கலான்' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென...
ஏறக்குறைய 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்!
நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என யோசிக்கிறீர்களா?
உண்மை தான்... இப்படி ஒரு விவகாரம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் நாளை நடக்க இருக்கிறது
அதுவும் மாவட்ட நடுவர் நீதி மன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர் இந்த குத்தகை ஏலத்தை நடத்தும் அதிகாரியாக இருக்கிறார் என்பது தான் இதில் அதிர்ச்சி.
காரணம் சட்ட விதிகள் அனைத்தும் அறிந்தவர்கள் இப்படி செயல்பாட்டால் சாமானியனின் குரல் எங்கே எடுபடும்.
சரி விஷயத்துக்கு வருவோம்...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் சுமார் 52 சர்வே நம்பர்களில...
'அந்தகன்' திரைப்படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது -.'டாப் ஸ்டார்' பிரசாந்த்
'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில...
நான் இசையமைத்த முதல் ஹாரர் திரைப்படம் - " P 2 - இருவர் " தான்
இசை விழாவில் இசையமைப்பாளர் தேவா !!
அறம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ள திரைப்படம் “P 2 - இருவர்”. ஆகஸ்ட் 9 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
நடிகர் ராஜசிம்மன் பேசியதாவது…
“P 2 - இருவர்” தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அனுமதியுடன் உங்களிடம் சில விசயங்கள் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பெரிய விசயம் சினிமாவில் நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லி, அதன் பிறகு பட ஷீட்டிங் கிடையாது எனச் சொல்லியுள்ளனர். அதற்கு அவ...
”தீரா சாதனை,ஆறா ரணம்” மீண்டும் மோதிய அஜீத்-விஜய்?
தமிழ் சினிமாவில் அஜீத்-விஜய் இருவரின் தகவல்கள் என்ன வந்தாலும் அவை பெரும் பரபரப்பாக பெசப்படும். ஒவ்வொரு முறையும் இவர்களின் படங்களின் ரிலீஸ் நேரத்தில் இந்த பரபரப்பு ரசிகர்களின் கடும் வார்த்தை மோதல்களில் சமூக வலைதளப்பக்கங்கள் அனலை கக்கியப்படியே இருப்பது வழக்கம்.
விஜய் தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டால் அஜீத் தரப்பில் ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தை அதிர வைக்கும்.
இந்த முறையும் விஜய் நடிக்கிற கோட் படத்தில் இருந்து 3வது சிங்கிள் லிரிக்கல் பாடல் ஒன்று இன்று வெளியாகும் என நேற்றே அறிவிப்பு வெளியாகி இருந்த்து.
விஜய் ரசிகர்களும் 3வது சிங்கிள் படலுக்காக மிக ஆர்வமாக காத்து இருந்தனர்.
இந்த சூழலில் அஜீத் ரசிகர்களும் வழக்கம் போல இன்றும் தல தரப்பில் ஏதாவது ஒரு அறிவிப்பு வரும் என தங்கள் பங்குக்கு காத்திருந்தனர்.
ர...
கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.
இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவி...
விஜய் தேவாரகொண்டாவின் 'VD12' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் 'VD 12' திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.
'ரௌடி' என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் 'VD 12 'எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் - அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது.
இந்தப் படத்திற்கு தற்போது ' VD 12' என தற...
'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 113.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டியுள்ளது!
மார்வெல் ஸ்டுடியோஸின் எபிக் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ. 113 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைப் படைத்துள்ளது.
உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் திரையரங்குகளில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மார்வெல் ஸ்டுடியோஸின் 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது....