தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த்!
தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த்!
2024ம் ஆண்டில் பத்ம விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, சமூகப் பணி தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அதன்படி, மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உட்பட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண் விருதுக்கு தேர்வானவர்கள்.
விஜயகாந்த் - கலை(தமிழகம்)
ஃபாத்திமா ஃபீவி - பொது விவகாரங்கள்(கேரளா)
ஹோர்முஸ்ஜி - இலக்கியம் மற்றும் கல்வி(மகாராஷ்டிரா)
மிதுன் சக்ரவர்த்தி - கலை(மேற்கு வ...









