நடிகர் அருண்விஜய் – இயக்குனர் விஜய் கூட்டணியில் பொங்கல் ரேசில் ஸ்பெஷல் ஆட்டம் ஆடப்போகும் “மிஷன் சாப்டர் 1”
நடிகர் அருண்விஜய் - இயக்குனர் விஜய் கூட்டணியில் பொங்கல் ரேசில் ஸ்பெஷல் ஆட்டம் ஆடப்போகும் "மிஷன் சாப்டர் 1"
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சாஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் உள்ள ஒரு ஒரு பெரிய வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டில் படத்தின் நாயகன் அருண் விஜய், நடிகர்கள் ருத்ரன், பரத் கோபண்ணா, விராஜ், அபிஹாசன், குழந்தை நட்சத்திரம் இயல், படத்தின் படத்தொகுப்பாளர் ஆன்டனி மற்றும் படத்தின் இயக்குநர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் நாசர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கலந்துகொண்டவர்கள் பேசியதாவது கீழே வருமாறு:
எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, “படம் சூப்பராக வந்திருக்கி...








