வெள்ளிக்கிழமை, ஜூன் 26
Shadow

Author: Kodanki

இந்தியாவில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்வு..!

இந்தியாவில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்வு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்  கடந்த பத்து ஆண்டுகளில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.குறிப்பாக 20 - 24 வயது பெண்கள் காண்டம் பயன்படுத்துவது அதிகம் என தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத பெண்களும், பாலியல் தொழில் செய்யும் பெண்களும் பாதுகாப்பான முறையில் பாலுறவு செய்ய விரும்புகின்றனர். 8 ஆண்களில் 3 பேர் கருத்தடை என்பது பெண்களின் பொறுப்பு என்று எண்ணுகிறார்கள். ஆண்கள் பாதுகாப்பான உறவு குறித்து கவலை கொள்வதில்லை என்றும் ஆய்வில் தெரிகிறது இந்த தகவல்கள் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. 99% ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கருத்தடை முறையை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். இதில் 15 - 49 வயதுடைய திருமணமான பெண்களில் 54% பேர் கருத்தடை மாத்திரைகளை பயன்ப...
கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..!

கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கருப்பு உடையில் பொற்கோயிலுக்கு போய் வேண்டிக்கொண்ட நயன்தாரா..! ஒவ்வொரு முறையும்  தான் நடித்த படம் ரிலீசான பின், கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றி விட்டு வருவது நயன்தாராவின் வழக்கம். அதன்படி இந்த முறை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்ற அவர், மனமுருக வேண்டிக்கொண்டாராம். கருப்பு உடையில் நயன் தாராவின் படங்கள் வெளியாகியுள்ளது. பின்னணியில் பொற்கோயில் தெரிகிறது. இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, அறம் 2, தெலுங்கில் சைரா போன்ற படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
மோடியின் பகோடா வியாபார பேச்சுக்கு பிச்சைக்கார வருமானம் சொல்லி பா.சிதம்பரம் நக்கல்..!

மோடியின் பகோடா வியாபார பேச்சுக்கு பிச்சைக்கார வருமானம் சொல்லி பா.சிதம்பரம் நக்கல்..!

HOME SLIDER, politics, செய்திகள்
முன்னாள் நிதிமந்திரி ப. சிதம்பரம் தொடர்ச்சியாக டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் மத்தியில் உள்ள மோடி அரசை கடுமையாக சாடிஉள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனியார் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியில், “ பக்கோடா விற்பனை செய்யும் நபர் வீட்டிற்கு ரூ. 200 கொண்டு சென்றால் அதனை வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா, இல்லையா?,”என பேசியிருந்தார். இதனை தாக்கும் வகையில் ஹர்திக் பட்டேல் பேசுகையில், “டீக்கடைக்காரர் இப்படிதான் பேசுவார், பக்கோடா கடை வைப்பதையும் அவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாக கருதுவார்கள். நிச்சயமாக பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமலே இருக்கிறார்,”என குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடி பக்கோடா விற்பனை செய்து ரூ. 200 சம்பாதிக்கலாம் என்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு வெளியே போராட்டமும் நடைபெற்றது. இப்போது பக்கோடா விற்பனை ...
ஷூட்டிங் தொடங்கிய சுட்டுப்பிடிக்க உத்தரவு..!

ஷூட்டிங் தொடங்கிய சுட்டுப்பிடிக்க உத்தரவு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தில், இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் நடிக்கின்றனர். குற்றச்சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் விக்ராந்த்தும், சுசீந்திரனும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது, ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கிறார். த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. இதன் மூலம் இயக்குநர் சுசீந்திரன் முதல்முறையாக நடிகராக அவதாரம் எடுக்கிறார். இதுகுறித்து மகிழ்ச்சியை அவரது டுவிட்டர்...
மே மாதம் தள்ளிப்போகிறது ரஜினியின் ‘2.0’?

மே மாதம் தள்ளிப்போகிறது ரஜினியின் ‘2.0’?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் ரஜினிகாந்த், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஷங்கர் டைரக்டு செய்துள்ளார். ரூ.450 கோடி செலவில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் எடுக்கப்பட்டது இல்லை. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில்  ரிலீசாகிறது. இதன் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக நடந்து சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. கடந்த அக்டோபர் மாதம் துபாயில் பிரமாண்ட விழா நடத்தி பாடல்களை வெளியிட்டனர். படம் எப்படி உருவானது என்று 1 நிமிடம் 48 நொடிகள் ஓடக்கூடிய தயாரிப்பு வீடியோவும் இணையதளங்களில் பரவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்ட விதம், ரஜினிகாந்த், அக்‌ஷய்க...
மதுரவீரன் இயக்குனரிடம் விஜயகாந்த் கேட்ட ரகசியம்..!

மதுரவீரன் இயக்குனரிடம் விஜயகாந்த் கேட்ட ரகசியம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் “மதுரவீரன்” கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல, அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது.  அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும், வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் இல்லை. இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருப்பார்கள். அனைத்து கதாபாத்திரங்களின் பின்னணியிலும் ஒரு நியாயமான காரணங்களுக்காக குரல் கொடுக்கும் காட்சிகள் தான் உண்டு. படத்தை பார்க்கும்போது அவரவர்கள் முன்வைக்கும் காரணங்களும், வாதங்களும் நியாயமானதாக இருக்கும். இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியி...
பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல்: ஸ்டாலின் – வைகோ -திருமா கைது

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல்: ஸ்டாலின் – வைகோ -திருமா கைது

HOME SLIDER, politics, செய்திகள்
பஸ் கட்டண உயர்வு 100 சதவீதம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கடந்த வாரம் ஆர்ப்பாட்டம், மறியலில ஈடுபட்டனர். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. கடந்த சனிக்கிழமை தி.மு.க. தலைமையில் 7 கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. பஸ் கட்டணத்தை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் எதிர்க்கட்சிகள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தை சிறிது குறைப்பதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி மாநகரப் பேருந்துகளில் ஒவ்வொரு ஸ்டேஜ்க்கும் ஒரு ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.4 ஆக மாற்றப்பட்டுள்ளது...